Sunday, November 14, 2010

திருமுருகன் 108 போற்றி .... அர்ச்சனை ....

தனலாபம், பூமிலாபம், எதிரிகளிடம் வெற்றி, 
ரோஹ நிவாரணம், செவ்வாய்  தோஷ  நிவர்த்தி
திருமணம்  போன்றவைகளுக்கு  செவ்வாய்க்கிழமை 
தோறும்  ஆறுமுகத்துடன்  உள்ள  முருகனை 
வள்ளி தெய்வானையுடன்  மனதில் உருவகித்து 
இந்த போற்றியை  பாராயணம்  செய்ய  வாழ்வில் 
வளம்  பெறலாம்.
 













திருமுருகன்  108  போற்றி ....  அர்ச்சனை ....

ஓம்   அழகா  போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம்  அரன் மகனே  போற்றி
ஓம் அயன்மால் மருகா போற்றி 

ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
ஓம் பன்னிருகை வேலவா போற்றி 
ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி         8

ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி 
ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
ஓம்  இடும்பனை வென்றவனே போற்றி
ஓம்  இடர் களைவோனே போற்றி

ஓம்   உமையவள்  மகனே  போற்றி
ஓம்   உலக நாயகனே  போற்றி
ஓம்  ஐயனே  போற்றி  அருளே போற்றி
ஓம்  ஐங்கரன் தம்பியே  போற்றி                  16          

ஓம்   ஓம்கார சொருபனே  போற்றி 
ஓம்   மூலப்பொருளே  குகனே போற்றி 
ஓம்  ஓதுவார்க் கினியனே போற்றி 
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி


ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி 
ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் வசமான செவ்வேள் போற்றி     24  

ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி 
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி 
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி 
ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி 


ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி 
ஓம் வேதப் பொருளே  வேந்தே போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி           32


ஓம்  செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
ஓம்  பழனி பதிவாழ் பாலக போற்றி 
ஓம்  இருளிடர் போக்கும் பகலவா போற்றி
ஓம்  இன்பமாம் வீடருள் இறைவா  போற்றி 

ஓம் அன்பின் உருவமே  எம்அரசே போற்றி 
ஓம்     ஔவைக் கருளியவனே   போற்றி
 ஓம்  சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி 
ஓம்  கந்தா கடம்பா  கார்த்திகேயா போற்றி      40 

ஓம்    கருணாகரனே    போற்றி
ஓம்    கதிர் வேலவனே   போற்றி

ஓம் மூலப்பொருளே முருகா போற்றி 
ஓம்  சூரனுக் கருளிய  சேனாபதியே போற்றி 

ஓம் குன்று தோறாடும்  குமரா போற்றி 
ஓம் அறுபடை வீடுடையவா  போற்றி
ஓம்   கார்த்திகை   மைந்தனே   போற்றி
ஓம்  கந்தசஷ்டி நாயக போற்றி                    48 


ஓம்  இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
ஓம்   பக்தர்தம்  பகை ஒழிப்பவனே போற்றி
ஓம்    மகா  சேனனே   போற்றி
ஓம்   மயில் வாகனனே   போற்றி


ஓம்  வடிவேலுடனே   வருவாய்  போற்றி 
ஓம்   அடியார் துயரம்   களைவாய்  போற்றி
ஓம்  வளமான வாழ்வு  தருவாய் போற்றி 
ஓம்  வள்ளி தெய்வானை  மணாளா  போற்றி                                   56

ஓம்   செஞ்சுடர்   மேனிச்  செவ்வேள்  போற்றி 
ஓம்   மலைமகட் கிளைய   மகனே   போற்றி 
ஓம்   அமிர்தாம்   தமிழின்   தலைவா  போற்றி 
ஓம்   தமிழர் தம்   கருணை மிகு   இறைவா  போற்றி 

ஓம்   ஆடும்   அயில்வேல்   அரசே  போற்றி 
ஓம்   வந்தருள்  செய்  வடிவேலவா   போற்றி 
ஓம்   கலியுக  வரதா   கந்தா   போற்றி 
ஓம்   கவலைக்   கடலை   களைவோய்   போற்றி                              64 

ஓம்   தந்தைக்கு  மந்த்ரம்  உரைத்தவா  போற்றி  
ஓம்   எந்தனுக்கு   இரங்கி   அருள்வாய்    போற்றி 
 ஓம்   சைவம்   வளர்த்த  சம்பந்தா  போற்றி 
ஓம்    சரவணபவ    சண்முகா   போற்றி 


ஓம்   வேடர் தம் கொடி மணாளா  போற்றி 
ஓம்   வனத்தில்  வேடனாய்  வந்தாய்  போற்றி 
ஓம்   புனத்தினில்  ஆண்டியாய்    வந்தவா  போற்றி 
ஓம்   தேன்திணைமா    நெய்வேத்யா  போற்றி                                        72 

ஓம்   தெவிட்டா இன்பமே  தென்றலே போற்றி
ஓம்   தேவாதி தேவனே   தெய்வமே போற்றி
ஓம்   போகர் நாதனே   பொலிவே போற்றி
ஓம்   போற்றப் படுவோனே   பொருளே போற்றி


  ஓம்    புண்ணிய  மூர்த்தியே  வரதா போற்றி 
ஓம்    யோக சித்தியே   அழகே   போற்றி 
ஓம்    பழனியாண்டவனே   பாலகா  போற்றி
ஓம்    தென்பரங் குன்றோனே தேவா போற்றி           80 

ஓம் கருணைபொழி போருர்க் கந்தா போற்றி 
ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி 
ஓம்  குறிஞ்சி நிலக்  கடவுளே  போற்றி 
ஓம் குறுமுனி  தனக்கருள்  குருவே போற்றி 

ஓம்  தணிகாசலம் வுறை சண்முகா போற்றி 
ஓம்  சிக்கல் மேவிய  சிங்காரா  போற்றி 
ஓம் நக்கீரர்க் கருள்  நாயகா போற்றி 
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி              88 

ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி 
ஓம்  மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி 
ஓம்  குன்றக்குடி அமர் குகனே போற்றி 
ஓம்  குமரகுரு புகழ் அழகா போற்றி 

ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி
ஓம்  பழனிப் பதிவாழ் பண்டித போற்றி 
ஓம்  செந்தூர் பதிவாழ்  சுந்தரா போற்றி                96 

ஓம்  மருதாசல மூர்த்தியே  மகிழ்வே போற்றி 
ஓம்  கந்தாஸ்ரமம் நிறை  கந்தா போற்றி 
ஓம் பழமுதிர்ச் சோலைப்  பதியே போற்றி 
ஓம் பத்துமலை முத்துக்குமரா போற்றி 

ஓம் ஒளவையின் பைந்தமிழ்  கேட்டவா போற்றி 
ஓம் அருமையின்  எளிய அழகே போற்றி 
ஓம்  இரு மயில் மணந்த ஏறே போற்றி 
ஓம்  இருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி         104 

ஓம் நீங்காப் புகழுடை  நிமலா போற்றி 
ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி 
ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி 
ஓம் போற்றி ...போற்றி ... ஜெய ஜெய வேலவா  போற்றி 108 

 முருகா, ஸ்கந்தா, சண்முகா  இன்னல்கள் நீக்கி 
நின்னைச்சரணடைவோருக்கு  எல்லா நலமும்  
வளமும் தந்தருள்வாய்  ஆறுபடையப்பா....
குமரா...உன் திருவடி தொழுதனம்  போற்றியே.....


             

Thursday, October 28, 2010

கர்ம வினைகள் தீர தானங்களும் .... பலன்களும்...





தானங்களும்  பலன்களும் 





அன்னதானம்    செய்தால்    பூர்வ  ஜென்ம  கர்மவினைகள் 
தீரும் . பித்ருக்களின்  ஆசிர்வாதம்  கிடைக்கும். 

ஆடைதானம்  செய்தால்  தகாத உறவுக்  குற்றங்கள் 
நீங்கும். பெண்களின்  கற்பிற்கு  ரட்சையாக  இருக்கும்.

காலணி   தானம்  செய்தால்  பெரியோர்களை  நிந்தித்த 
பாவம் விலகும்.தீர்த்த யாத்திரை  செய்த பலன் கிடைக்கும்.

 மாங்கல்ய சரடு  தானம்  செய்தால் காமக் குற்றங்கள் 
அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம்  உண்டாகும் .   

குடை தானம்  செய்தால்  தவறான  வழியில் சேர்த்த 
செல்வத்தினால்  ஏற்பட்ட பாவம் விலகும் .
குழந்தைகளுக்கு  சிறப்பான  எதிர்காலம்  உண்டாகும். 

பாய்  தானம் செய்வதால்  பெற்றவர்களை  பெரியவர்களை 
புறக்கணித்ததால்  வந்த சாபங்கள்  தீரும். 
கடும் நோய்களுக்கு  நிவாரணம்  கிட்டும் .
அமைதியான  மரணம்  ஏற்படும் .

பசு  தானம்  செய்தால் இல்லத்தின்  தோஷங்கள்  விலகும்.
பலவித  பூஜைகளின்  பலன்கள்  கிடைக்கும்.

 பழங்கள் தானம்  செய்தால்  பல ஜீவன்களை  வதைத்த 
சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.

 காய்கறிகள்  தானம்  செய்தால்  பித்ரு சாபங்கள் விலகும் .
 குழந்தைகளின்  ஆரோக்யம்  வளரும்.

 அரிசி  தானம் செய்தால்  பிறருக்கு  ஒன்றுமே தராமல்
 தனித்து  வாழ்ந்த  சாபம்  தீரும்.  வறுமை  தீரும்.

எண்ணெய்   தானம் செய்தால்  நாம்  அறிந்தும்  அறியாமலும்
 செய்த கர்ம வினைகள்  அகலும் .கடன்கள் குறையும்.
 
பூ    தானம்  செய்தால்  அந்தஸ்து  காரணமாக 
பிறரை  அவமதித்ததால்  ஏற்படும் தீவினைகள்  நீங்கும்.
 குடும்ப வாழ்க்கை  சுகமாகவும் , சாந்தமாகவும்  அமையும். 

பொன் மாங்கல்யம் தானம்  செய்தால்  மாங்கல்ய
தோஷங்கள்  நீங்கும். திருமண  தடங்கல்கள்  நீங்கும் .

நம்மால்  முடிந்த  தானங்கள்  செய்தால்  நமக்கு  வளமான 
வாழ்வு  அமைவதோடு  , நம்  சந்ததிக்கும்   நல்ல  வளமான 
வாழ்வு   அமையும். 


Wednesday, October 13, 2010

ஸ்ரீமஹா சரஸ்வதி 108 போற்றி .....


                       சரஸ்வதி  நமஸ்துப்யம்  வரதே  காம ரூபிணி
                       வித்யாரம்பம்  கரிஷ்யாமி  ஸித்திர் பவது மே ஸதா...

ஆய கலைகள்  அறுபத்து நான்கினையும்
ஏய  உணர்விக்கும்  என்  அம்மை -தூய
உருப்பளிங்கு போல்வாள்  என் உள்ளத்தினுள்ளே 
இருப்பளிங்கு  வாராது இடர் .

ஓம்   கலைவாணியே  போற்றி
ஓம்   கல்வியறிவு   தருபவளே  போற்றி
ஓம்   நான்முகனின்  நாயகியே  போற்றி
ஓம்   நான்முகனின்  நாநுனியில்  வசிப்பவளே  போற்றி

ஓம்   சகல கலா வல்லித்தாயே   போற்றி
ஓம்   ஏகவல்லி  நாயகியே  போற்றி
ஓம்   பிரம்மதேவரின்  பத்தினியே  போற்றி
ஓம்   பரசுராமரைப்  பெற்றவளே   போற்றி                                             8

ஓம்  கல்வியறிவிற்கு   அதிபதியே  போற்றி
ஓம்  மஹா மாயா  சக்தியும்  நீயே   போற்றி
ஓம்   தாமரை  மலரில்  வாசம்  செய்பவளே  போற்றி
ஓம்   கேட்கும்  வரமனைத்தும்  தருபவளே  போற்றி

ஓம்   ஞானமுத்திரை  தருபவளே  போற்றி
ஓம்   புத்தகம்   கரத்தில்  கொண்டவளே  போற்றி
ஓம்  மஹா  வித்தை  நீயே  தாயே  போற்றி 
ஓம்  மஹா பாதகங்களை  துவம்சம்  செய்பவளே  போற்றி         16

ஓம் அனைத்து  யோகங்களையும்  தருபவளே  போற்றி
ஓம்  மஹாகாளி  மஹாதுர்கா  மஹாலஷ்மி  நீயே  போற்றி
ஓம்  உயரிய  கல்வியை  கேட்டபடி  தருபவளே  போற்றி
ஓம்  கற்றதற்கு  ஏற்ற  உயர்வாழ்வை  வரமாய்த்  
தருபவளே  போற்றி

ஓம்  சர்வ மந்த்ரங்களின்  மூலாதாரப்  பொருள் நீயே போற்றி
ஓம்   சர்வ  மங்கள மந்திரங்கள்  சித்தி யளிப்பவளே   போற்றி
ஓம்   சர்வ மங்கள மாங்கல்ய   பலம்  தருபவளே  போற்றி
ஓம்   சர்வ சாஸ்த்திரங்களின்  உற்பத்தி  ஸ்தலம்  நீயே  போற்றி  24

ஓம்  கற்றோரை  சென்ற  இடமெல்லாம்   சிறப்பிக்கும்  
தாயே போற்றி
 ஓம்  நல்லவர்  நாவில்   இருந்து  நல்வாக்கு  
சொல்பவளே  போற்றி
 ஓம்  அற்புத மந்திரம்  எழுதும்   வாணியே  போற்றி
 ஓம்   அழகுவீணை   இசைப்பவளே  போற்றி

 ஓம்  கலைகள்  மூன்றிற்கும்  மூலாதாரச்  சுடரே  போற்றி
 ஓம்  கல்வியை  உனது  ரூபமாகக்  கொண்டவளே  போற்றி
 ஓம்  யந்திர  தந்திர  மந்த்ரம்   கற்றுத்  தருபவளே   போற்றி
 ஓம்  தொழிற்  கல்வி  அனைத்தும்   தருபவளே  போற்றி                 32

ஓம்   அனைத்து  வாகனங்களின்  சூட்சுமம்  நீயே  போற்றி 
ஓம்   கணிதம்  தந்த  கலைவாணித்  தாயே   போற்றி
ஓம்   கணிப்பொறி யியலின்   காரணி  போற்றி
ஓம்    காலம்   நேரம்   வகுத்தவளே   போற்றி

ஓம்  விஞ்ஞானத்தின்  மூலாதாரமே  போற்றி
ஓம்   அண்ட சராசரங்களின்  இருப்பிடம்  கணித்த  தாயே  போற்றி
ஓம்   வான  சாஸ்திர  அறிவின்   பிறப்பிடம்  நீயே  போற்றி
ஓம்   வறுமையை  போக்கும்  கல்வித்  தாயே  போற்றி                     40

ஓம்  இயல்  இசை  நாடகம்  போதித்த   கலைமகளே  போற்றி
ஓம்   வீணை யொலியில்  மந்த்ரம்  மீட்டும்  தாயே  போற்றி
ஓம்  மூவுலகும்  மயங்கும்  வீணை  மீட்டும்  
வீணா கான வாணி  போற்றி
ஓம்  முத்தமிழும்   தழைக்கச்  செய்த   அன்னையே   போற்றி

ஓம்   வாக்கிற்கு  அதிதேவதை  நீயே  தாயே போற்றி
ஓம்  சௌபாக்ய  செல்வம்  தரும்  மந்த்ரம்  நீயே போற்றி
ஓம்   வாழ்வைப்    புனிதமாக்கும்   மந்திரமே   போற்றி
ஓம்   கலைவாணித் தாயே  சரஸ்வதியே   போற்றி                             48

ஓம்  ரக்தபீஜ  சம்ஹார மந்த்ரம்  தந்த  வாணீ  போற்றி
ஓம்  அம்பிகை  சாமுண்டி  வராஹி  யாவரும்  நீயே  போற்றி
ஓம்  முக்காலங்களிலும்  முகிழ்ந்து  உறைந்தவளே  போற்றி
ஓம் சுபாஷிணி  சுபத்ரை  விஷாலாட்சி  மூவரும்  நீயே  போற்றி

ஓம்  பிரஹ்மி  வைஷ்ணவி  சண்டி  சாமுண்டி  நீயே  போற்றி
ஓம்  பாரதி  கோமதி  நாயகி  நாண்முகி தாயே  போற்றி
ஓம்  மகாலஷ்மி  மஹாசரஸ்வதி  மகாதுர்கா  நீயே  போற்றி 
ஓம் விமலா மாகாளி  மாலினி  யாவரும்  நீயே போற்றி               56 

ஓம்  விந்திய  விலாசினி  வித்யா  ரூபினி   போற்றி 
ஓம்  மஹா  சக்தியினுள்ளே உறைபவள்   போற்றி 
ஓம்  சர்வ தேவியருள்ளும்  உறைபவள்  நீயே  போற்றி 
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும்  கல்வியினால் 
அருள்பவளே  போற்றி 

ஓம் திருமால் உந்தியில் உதித்தவனின்  துணைவி  போற்றி 
ஓம் உலகின்  எல்லா எழுத்திற்கும்  மூலமே போற்றி 
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மந்திர எழுத்துகளின்  ரூபமே போற்றி 
ஓம் மந்திர ராஜ்யத்தின் தேவி பீஜாட்ஸரி போற்றி                           64

ஓம் சர்வாம்பிகையே சத்தியவாசினி புத்தகவாசினியே  போற்றி
ஓம்  சர்வ  அபாயங்களையும்  துவம்சிப்பவளே  போற்றி 
ஓம்  சாற்றுக் கவி  நாநுனி யுரையும் அன்னையே போற்றி 
ஓம் காற்றில் கலந்த  மந்திர  ஒலியே  போற்றி

ஓம் வித்யா திருஷ்டா யுத்மா போற்றி 
ஓம் வாக்கின்  தலைவியான  வாக்தேவி  போற்றி 
ஓம் விஞ்சு பகவதி  உயர்புகழ்  பிராம்ஹி  போற்றி 
ஓம்  சொல்லும் சொல்லின்  மெய்ஞானப் பொருளே போற்றி  72

ஓம்  நீதித்துறை  நடுநின்ற  நாயகி போற்றி 
ஓம்  பண் பரதம் கல்வி  தருபவளே போற்றி 
ஓம் கற்றவர் நாவில் உறைபவளே  போற்றி 
ஓம் யந்திர வாகன  ஆயுதங்களின்  அதிதேவதையே போற்றி 

ஓம் தேகத்தின்  புத்திப் பகுதியில்  உறைபவளே  போற்றி 
ஓம்  வேத தர்ம நீதி  சாஸ்திரங்கள்  வகுத்தவளே  போற்றி 
ஓம்  பூஜிப்போர் மனம்  மகிழ்விப்பவளே  போற்றி 
ஓம்  அனைத்து  புண்ய தீர்த்தங்களின்  ரூபத்தவளே  போற்றி     80

ஓம்  யமுனை நதி தீரத்தின்  மையங் கொண்டவளே  போற்றி 
ஓம் சர்வ ஜீவ காருண்ய மனம் கொண்ட  மாதரசி போற்றி 
ஓம்  பிரம்மா லோகத்தை  மையம்  கொண்ட பிரம்ம 
நாயகி போற்றி 
ஓம் உச்ச நிலை வறுமையையும்  கற்ற வித்தை கொண்டு 
அழிப்பவளே  போற்றி 

ஓம் சரணடைந்தவர்க்கு  சாஸ்வத மானவளே போற்றி 
ஓம் வேதாந்த ஞானிகளின்  ரூபத்தவளே போற்றி 
ஓம் எழு தாமரை யுறை புகழ் முன்றக் கரவுருள்  போற்றி 
ஓம் பின்னமேதுமில்லாமல்  தேவையானதை 
தருபவளே  போற்றி                                                                               88 

ஓம்  இடது ஒரு கையில் சுவடி கொண்டவளே  போற்றி 
ஓம் இடது  மறு கையில்  ஞானாமிர்த கலசம்  
கொண்டவளே  போற்றி 
ஓம் வலது ஒரு கையில் சின் முத்ரா  கொண்டவளே  போற்றி 
ஓம் வலது  மறு கையில் சிருஷ்டியின் அட்சரமாலை 
கொண்டவளே போற்றி 

ஓம் பத்மாசனம் உறைபவளே  போற்றி 
ஓம்  புத்திப் பிரகாசம்  தருபவளே  போற்றி 
ஓம்  வாக்கு வன்மை  தருபவளே  போற்றி 
ஓம் மனதில்  தூய்மை சாந்தி  அமைதி  தருபவளே  போற்றி       96

ஓம் தத்துவ எழுத்து ரூபம் தாங்கிய  தேவி போற்றி 
ஓம்  மஹா நைவேத்யம்  உவந்தவள்  போற்றி 
ஓம்  கற்பூர  நீராஜனம் உவந்தவள்  போற்றி 
ஓம் ஸ்வர்ண புஷ்பம்  உவந்தவளே  போற்றி                                     100
ஓம்  யுக தர்மம்  கணித்தவளே  சகலகலாவல்லியே  போற்றி 
ஓம்  ஸ்ரீசக்கர பூஜையின் மந்திர ரூபிணியே  போற்றி 
ஓம் பதாம் புயத்தவளே  சகலகலாவல்லியே  போற்றி 
ஓம்  கற்றறிஞர்  கவிமழை  தரும் கலாப மயிலே  போற்றி 
  
ஓம்  கண்ணும் கருத்தும்  நிறை  சகலாகலாவல்லியே  போற்றி 
ஓம்  வெள்ளோதிமைப் பேடே  சகலகலாவல்லியே போற்றி 
ஓம்  கண்கண்ட  தெய்வமே  சகலகாவல்லியே போற்றி 
ஓம் கல்விச் செல்வம்  தந்தருள்வாய்  கலைவாணியே  
போற்றி ... போற்றி ... போற்றி ... போற்றியே ....                                 108 


வாணி  சரஸ்வதி  என் வாக்கில்  நீ குடியிருந்து 
தாயே  சரஸ்வதியே  சங்கரி நீ என் முன் நடந்து 
என் நாவில் குடியிருந்து  நல்லோசை  தந்துவிட்டு 
கமலாசனத்தாலே  எமைக் காத்து 
என் குரலில்  நீயிருந்து  கொஞ்சிடனும்  பெற்றவளே ...
என்  நாவில் நீ தங்கி  குடியிருந்து 
சொற்பிழை  பொருட்பிழை  நீக்கி 
நல்லறிவும்  நல்வாழ்வும்  நீ தந்து 
மங்கல வாழ்விற்கு  வழி வகுத்து 
தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு 
சாஸ்வதமான  சரஸ்வதி  தாயே 
உன்  திருவடி  சரணம்  போற்றி... 
உன்  மலரடி  சரணம்  போற்றி ...போற்றியே .....

Friday, September 17, 2010

ஓம் அகத்தியர் திருவடிகள் 108 போற்றி .....

ஓம்  அகத்தீசாய நம:

அகர  முதல எழுத்தெல்லாம்  ஆதி 
அகத்தியம்  முதற்றே  உலகு










ஓம்  அகத்தீசப்  பெருமானே  போற்றி 
ஓம்  அகிலம் போற்றும்  அறிவுக்கடலே போற்றி
ஓம்  அட்டமா  சித்துகள்  பெற்றவரே  போற்றி 
ஓம்  அகத்தியர்  மலை மீது  அமர்ந்தவரே  போற்றி                    

ஓம்  தமிழ்  முனியே  போற்றி 
ஓம்  இறைவனிடம்  தமிழ்  கற்றவரே  போற்றி 
ஓம்  தமிழின்  முதல் தொண்டரே  போற்றி 
ஓம்  தமிழின் முதல்  முனைவரே  போற்றி                                        8

ஓம்  பொதிகைமலை  மாமுனியே  போற்றி 
ஓம்  தவ சீலரே  போற்றி 
ஓம்  சிவ சீடரே  போற்றி 
ஓம்  கும்ப சம்பவரே  போற்றி 

ஓம்  நந்தீஸ்வரரின் சீடரே போற்றி 
ஓம்  தன்வந்திரியிடம்  மருத்துவம்  பயின்றவரே  போற்றி 
ஓம்  தேரையருக்கு  மருத்துவம்  பயிற்றுவித்தவரே  போற்றி
ஓம் காமேஸ்வரி  மந்திர  உபதேசம்  பெற்றவரே  போற்றி      16

ஓம்  வயதில் எல்லையில்லா  சித்தரே போற்றி 
ஓம் குருவுக்கெல்லாம்  மகா குருவே  போற்றி 
ஓம் சித்தருக்கெல்லாம் மகா சித்தரே  போற்றி 
ஓம் பஞ்சேஷ்டி தலம் உறைபவரே போற்றி 

ஓம்  நவராத்திரி பூஜை கல்பம்  இயற்றியவரே  போற்றி 
ஓம்  நயனவிதி என்ற கண் மருத்துவ நூல் எழுதியவரே போற்றி
ஓம்  விட ஆருட நூல்  தந்தவரே  போற்றி 
ஓம்  மூலிகை அகராதி  அருளியவரே  போற்றி                         24

ஓம் அகத்தியம்  தந்த  அருளாளரே  போற்றி 
ஓம் அகத்தியர்  காவியம்  தந்தவரே  போற்றி
ஓம்  அகத்தியர்  வெண்பா அருளியவரே  போற்றி 
ஓம் அகத்திய  நாடி அருளியவரே  போற்றி                                      

ஓம் வைத்திய சிந்தாமணி  தந்தவரே  போற்றி 
ஓம் அகத்தியர் பஷிணி  அருளாளரே  போற்றி 
ஓம் அகத்திய  சூத்திரம்  படைத்தவரே போற்றி 
ஓம்  அகத்திய ஞானம்  தந்தவரே  போற்றி                                   32

ஓம் அகத்திய சம்ஹிதை  அருளியவரே  போற்றி 
ஓம் ஐந்து சாஸ்திரம்  தந்தவரே  போற்றி 
ஓம் கிரியை யோகம்  படைத்தவரே போற்றி 
ஓம்  ஆறெழுத்து  அந்தாதி  அருளியவரே  போற்றி                       

ஓம்  வைத்திய கௌமி எழுதியவரே  போற்றி 
ஓம் வைத்திய ரத்னாகரம்  எழுதியவரே போற்றி 
ஓம் வைத்திய கண்ணாடி  தந்தவரே  போற்றி 
ஓம் வைத்திய ரத்ன சுருக்கம்  அளித்தவரே  போற்றி             40

ஓம்  வாகட  வெண்பா  அருளியவரே  போற்றி 
ஓம்  சிவா சாலம்  தந்தவரே போற்றி 
ஓம்  சக்தி  சாலம்  தந்தவரே  போற்றி 
ஓம்  சண்முக சாலம்  தந்தவரே  போற்றி                                          

ஓம் சமரசநிலை  ஞானம்  போதிதவரே  போற்றி 
ஓம்  சக்தி  சூத்திரம்  சமைத்தவரே  போற்றி 
ஓம்  இராமனுக்கு சிவகீதை  அருளியவரே  போற்றி 
ஓம்  ஆதித்ய ஹிருதயம் அருளியவரே  போற்றி                    48

ஓம்  வாதாபியை  வதம்  செய்தவரே  போற்றி
ஓம்   சுவேதனின்   சாபம்  தீர்த்தவரே  போற்றி 
ஓம்  இடும்பனை  காவடி  எடுக்க  வைத்தவரே  போற்றி 
ஓம்  தொல் காப்பியரின்  குருவே  போற்றி

ஓம் கடல் நீரைக் குடித்து  வற்றச் செய்தவரே போற்றி 
ஓம் நீரின் மேலே  தவமிருந்தவரே  போற்றி 
ஓம் விந்திய மலையின்  அகந்தையடக்கியவரே போற்றி 
ஓம்  அசுராசுரர்களை  அழித்தவரே போற்றி                           56                   

ஓம்  காவிரியைப்  பெருக்கியவரே  போற்றி 
ஓம்  தாமிரபரணியை  உருவாக்கியவரே  போற்றி 
ஓம்  ராவணனை  இசையால்  வென்றவரே  போற்றி 
ஓம் அகஸ்தீஸ்வரம்  அமைத்தவரே  போற்றி 

ஓம்  தேவாதி தேவர்களை  காத்தவரே  போற்றி 
ஓம்  சிவசக்தி  திருமண  தரிசனம்  கண்டவரே போற்றி 
ஓம்  சித்த வைத்திய  சிகரமே  போற்றி 
ஓம் அகத்திய  பூஜாவிதி  தொகுத்தவரே போற்றி                     64


ஓம்  நான்கு யுகங்களையும்  கடந்தவரே  போற்றி 
ஓம்  முத்தமிழால்  உலகை  ஆண்டவரே  போற்றி 
ஓம்  தமிழ்ச்  சங்கங்களின்   தலைவனே  போற்றி 
ஓம்  சிவசூரிய  வழிபாட்டைத்  துவக்கியவரே  போற்றி
                    

ஓம்  கும்பத்தி லுதித்த  குறுமுனியே  போற்றி 
ஓம்  வடதென் திசையை  சமப்படுத்தியவரே  போற்றி 
ஓம்  உலோபமுத்திரையின்  மணாளா  போற்றி 
ஓம்  அம்பையில்  கோயில்  கொண்டவரே  போற்றி               72

ஓம்  அரும் மருந்துகள்  அறிந்தவரே  போற்றி 
ஓம் அனைத்தும் கற்றுத்  தெளிந்தவரே  போற்றி 
ஓம்  முக்காலமும்  உணர்ந்தவரே  போற்றி 
ஓம்  முத்தமிழும்  வளர்த்தவரே  போற்றி                                         

ஓம்  ஆஷா சுவாஸினி மைந்தரே  போற்றி 
ஓம்  நெல்மணிகளின்  தலைவனே  போற்றி 
ஓம்  சிவன்  அம்சமே  போற்றி 
ஓம் திருமால் விசுவரூப தரிசனம் கண்டவரே போற்றி       80

ஓம்  சர்வ  சக்திகளும்  தருபவரே  போற்றி 
 ஓம் சகல கலைகளும்  சித்தியாக  அருள்பவரே போற்றி 
ஓம்  பிறவா வரம்  தரும்   பெருமானே  போற்றி 
ஓம்  தேவி  உபாசகரே  போற்றி                                                              

ஓம்  இசையிலும்  கவிதையிலும் மேன்மை தருபவரே  போற்றி 
ஓம்  கல்வித் தடை  நீக்குபவரே  போற்றி 
ஓம்  புத பகவானின்  தோஷம்  நீக்குபவரே  போற்றி 
ஓம்  முன் தீவினைப்  பாவங்கள்  தீர்ப்பவரே  போற்றி           88

ஓம்  பேரும் புகழும் மதிப்பும் உண்டாக  அருள்பவரே போற்றி 
ஓம்  பூர்விக சொத்துக்கள் கிடைக்க  அருள்பவரே  போற்றி 
ஓம்  சகலவித  நோய்களையும்   தீர்ப்பவரே  போற்றி 
ஓம்  குடும்பத்தில்  ஒற்றுமை  நிலவச்  செய்பவரே  போற்றி 

ஓம்  பித்ரு சாபம்  நீக்கி    ஆசி பெற  அருள்பவரே  போற்றி 

ஓம்  சத்ருக்களின்  மனம்  மாற்றி  அன்புரச் செய்பவரே  போற்றி 
ஓம்  சித்திகள்  பெற்று  உயரச்  செய்பவரே  போற்றி 
ஓம்  நல் குருவாகி  மனதார  வாழ்த்து பவரே   போற்றி          96

ஓம்  அண்டம் பிண்டம் நிறைந்த அயன்மால்  போற்றி 
ஓம்  அகண்டம் பரி பூரணத்தின் அருளே   போற்றி 
ஓம்  மண்டலஞ் சூழ்  இரவிமதி  சுடரே  போற்றி 
ஓம்  மதுரத்   தமிழோதும்   அகத்தீசரே  போற்றி                        100

 ஓம்  எண்திசையும்  புகழும்  என் குருவே  போற்றி
 ஓம் இடைகலையின்  சுழுமுனையின்  கமலம்  போற்றி 
ஓம்  குண்டலியில்  அமர்ந்தருளும்  குகனே  போற்றி 
ஓம்  மேன்மை கொள் சைவநீதி  விளங்க  செய்பவரே  போற்றி

ஓம்  கும்பேஸ்வரன் கோயில் முக்தி  அடைந்தவரே  போற்றி 
ஓம்  குருவாய்  நின்று  இன்றும்  ஆசிகள்  அளிப்பவரே  போற்றி 
ஓம்  குருமுனியின்  திருவடிகள்  எப்போதும்  போற்றி 
ஓம் இன்னல்கள்  நீக்கி இன்பம்  தரும்  அகத்தீசப்  பெருமானே 
உமது  திருவடிகள்  சரணம்  போற்றி.... போற்றியே .....            108   




 தவறிருப்பின்  சிறியேனை  மன்னிக்கவும் , தயவு செய்து  
சுட்டிக் காட்டவும்.  திருத்திக்  கொள்வேன்.








Wednesday, September 8, 2010

ஸ்ரீ பத்ரகாளியம்மன் 108 போற்றி ....

காளி  காயத்ரி

ஓம்  காளிகாயை ச  வித்மஹி        சிம்ம வாஹின்யை ச  தீமஹி
தன்னோ  அகோர  ப்ரசோதயாத் .    

ஸ்ரீ  பத்ரகாளியம்மன்  108 போற்றி .....
ஓம்  அன்னையே  போற்றி
ஓம்   அழகே      போற்றி
ஓம்   ஆத்தா      போற்றி
ஓம்   ஆரணி      போற்றி
ஓம்   இளகியோய்   போற்றி
ஓம்    இமயோய்    போற்றி                             6

ஓம்   ஈஸ்வரி   போற்றி
ஓம்   ஈவோய்    போற்றி
ஓம்   உமையே    போற்றி
ஓம்   உத்தியே    போற்றி
ஓம்   எழிலே    போற்றி
ஓம்   ஏதிலாய்   போற்றி                                   12

ஓம்  ஐங்குனி   போற்றி
ஓம்   ஐஸ்வரி   போற்றி
ஓம்   அங்கயல்   போற்றி
ஓம்   அருமையே   போற்றி
ஓம்   உருமையே   போற்றி
ஓம்   ஒளியின் ஒளியே  போற்றி                 18

ஓம்   கனல் விழியே   போற்றி
ஓம்   கமலினியே    போற்றி
ஓம்   கங்கனியே     போற்றி
ஓம்   கிளி மொழியே   போற்றி
ஓம்   குயில்  மொழியே  போற்றி
ஓம்   குண சீலியே   போற்றி                           24

ஓம்  குணவதியே   போற்றி
ஓம்   குடும்பினியே   போற்றி
ஓம்   கொற்றவையே   போற்றி
ஓம்   கொல்லியே   போற்றி
ஓம்   குவிமுலையே  போற்றி
ஓம்   கோள்களாட்சியே  போற்றி                 30

ஓம்   கெளரியே    போற்றி
ஓம்   கௌமாரியே  போற்றி
ஓம்   கெளசகியே    போற்றி
ஓம்   கமலையே    போற்றி
ஓம்   சண்டி சாமுன்டியே   போற்றி
ஓம்  சூலினியே   போற்றி                                 36

ஓம்  செங்கனியே    போற்றி
ஓம்   செஞ்சடையே  போற்றி
ஓம்   சைகையே    போற்றி
ஓம்   தைலஸ்ரீயே   போற்றி
ஓம்   தர்பரையே    போற்றி
ஓம்   பராபரையே   போற்றி                           42

ஓம்   தாட்சாயணியே   போற்றி
ஓம்   தினகரியே    போற்றி
ஓம்   நடனகாளியே   போற்றி
ஓம்   நல்மையிலே  போற்றி
ஓம்  நற்குயிலே   போற்றி
ஓம்   ஆதியே   போற்றி                                    48

ஓம்  ஓங்காரியே   போற்றி
ஓம்   பைரவியே    போற்றி
ஓம்  கருஉருவே   போற்றி
ஓம்  புனலின்  இதயமே  போற்றி
ஓம்  புரந்தரியே   போற்றி                   
ஓம்   நிரந்தரியே   போற்றி                              54

ஓம்  மகா மாயா  போற்றி
ஓம்   மகமாயி   போற்றி
ஓம்   மாலினியே  போற்றி
ஓம்  குண்டலினியே   போற்றி
ஓம்   பரிபூரணியே   போற்றி
ஓம்   பார்கவியே   போற்றி                             60

ஓம்   உடையவள்  போற்றி
ஓம்   பங்கஜா   போற்றி
ஓம்   சாம்பவியே   போற்றி
ஓம்   மோகனாவே  போற்றி
ஓம்   மனோன்மணியே  போற்றி
ஓம்   தடாதகையே   போற்றி                           66

ஓம்  ஜடாதாரியே    போற்றி 
ஓம்   மணிமகளே    போற்றி
ஓம்   அலர்மகளே   போற்றி
ஓம்   சந்த்ரிகையே   போற்றி
ஓம்   சியாமளா   போற்றி
ஓம்   ஸ்ரீயந்திரம்   போற்றி                               72

ஓம்  பொங்கழல்   போற்றி
ஓம்   இளம் மலரே  போற்றி
ஓம்   மதியொளியே   போற்றி 
ஓம்   ஒளிசிவையே   போற்றி
ஓம்   வான்நிதியே   போற்றி
ஓம்   பசிலோக  பயங்கரியே   போற்றி      78

ஓம்   நிரஞ்சனியே   போற்றி
ஓம்   ஆனந்த நாயகியே  போற்றி
ஓம்   பரோப காரியே   போற்றி
ஓம்    பராசக்தியே  போற்றி
ஓம்   வாராஹியே   போற்றி
ஓம்   ஓம்   வாக்தேவியே  போற்றி              84

ஓம்   வீரகோஷ்டித்  தாயே  போற்றி
ஓம்   நவகாளியே   போற்றி
ஓம்   அஷ்டகாளியே   போற்றி
ஓம்   வீர காளியே   போற்றி
ஓம்   வீர பத்ரகாளியே  போற்றி
ஓம்   வன  பத்ரகாளியே  போற்றி                90

ஓம்   கொல்லிக்காளியே  போற்றி
ஓம்  பச்சைக் காளியே  போற்றி
ஓம்  பவழக் காளியே  போற்றி
ஓம்  வக்ரகாளியே   போற்றி
ஓம்   மதுரகாளியே   போற்றி
ஓம்  கொண்டத்துக் காளியே  போற்றி       96

ஓம்  ஊர்த்துவ  காளியே  போற்றி
ஓம்   வெட்டுடைக் காளியே  போற்றி
ஓம்   அக்கினி  காளியே போற்றி
ஓம்   பாதாள  காளியே  போற்றி
ஓம்   இரண  காளியே  போற்றி
ஓம்   தில்லைக்  காளியே போற்றி             102

 ஓம்   மங்கள  சண்டிகா   போற்றி
 ஓம்   மா காளியே  போற்றி
 ஓம்   கோட்டைக்  காளியே  போற்றி
 ஓம்   உஜ்ஜயினி  மாகாளியே  போற்றி
 ஓம்   பத்ரகாளித்  தாயே  போற்றி
 ஓம்   வடபத்ர  காளித் தாயே  போற்றி ... போற்றி ...   108

ஓம்  சக்தி ...  ஓம்  சக்தி  ... ஓம்  சக்தி  ...ஓம் ...
ஓம்   சக்தி ...  பராசக்தி ...  ஓம்  சக்தி ... ஓம் ...
ஓம்   சக்தி ...   பத்ரகாளி...  ஓம்  சக்தி ... ஓம் .