Monday, August 30, 2010

ஸ்ரீமீனாட்சியம்மன் 108 போற்றி.....

ஓம் அங்கயற்கண்ணி அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி       

ஓம் அரசிளங் குமாரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுத நாயகியே போற்றி
ஓம் அருந்தவ நாயகியே போற்றி                         8

ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க் கரசியே போற்றி
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி                             

ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத் தரசியே போற்றி                                  16

ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி                               

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண்திசையும் வென்றாய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி                           24

ஓம் ஐயந் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி

ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக் குன்றே போற்றி                        32

ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி

ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக் கினியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி              40

ஓம்  கிளியேந்திய  கரத்தோய் போற்றி
 ஓம்   குலச்சிறை காதோய் போற்றி 
ஓம்  குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம்  கூடற்கலாப மயிலே போற்றி 

ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி                                  48 

ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தந்தெளிவிப்பாய் போற்றி
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்த வல்லியே போற்றி

 ஓம்  சிங்கார வல்லியே போற்றி
ஓம்   செந்தமிழ்த் தாயே   போற்றி  
ஓம்  செல்வத்துக்கரசியே  போற்றி 
ஓம் சேனைத் தலைவியே   போற்றி                     56

ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி

ஓம் தமிழர்குலச் சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த்தாயே போற்றி
ஓம் திருவுடை யம்மையே போற்றி
ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி                  64  

ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் ச்சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி

ஓம் தென்னவன் செலவியே போற்றி
ஓம் தேன்மொழியம்மையே போற்றி
ஓம் தையல்நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி                     72

ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி

ஓம் பக்தர்தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருத்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி              80

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி

ஓம் பாண்டிமா தேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரியநாயகியே போற்றி                                88

ஓம் பொன் மயிலம்மையே போற்றி
ஓம் பொற் கொடி அம்மையே போற்றி
ஓம் மலை யத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி

ஓம் மழலைக் கிளியே போற்றி
ஓம் மனோன் மணித்தாயே போற்றி
ஓம் மண் சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி                           96

ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி யம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி

ஓம் முக்கண்சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி யம்மையே போற்றி
ஓம் வடிவழ கம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தாய் போற்றி              104

ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்போய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி...போற்றி
ஓம் அங்கயற்கண்ணி அம்மையே போற்றி...போற்றி

நாங்கள் செய்யும் இந்த அர்ச்சனை சேர்ந்த துதியை எம்
அன்னையே ஏற்று அருள்க அருள்கவே ...

நாங்கள் சீரும் சிறப்பும் செல்வமும் பெற்று பல்லாண்டு
வாழ்க வாழ்கவென அருள்கவே .

Thursday, August 26, 2010

ஸ்ரீஅம்பிகை அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் சிவாயை  நம:                                                                                                  ஓம்  சிவசக்தியை  நம:
ஓம்   இச்சாசக்தியை   நம:
     ஓம்   க்ரியாசக்தியை  நம:
ஓம்   ஸ்வர்ண  ஸ்வரூபிண்யை  நம:
      ஓம்  ஜ்யோதிலஷ்மியை   நம:             

ஓம்    தீபலஷ்மியை   நம:
       ஓம்  மகாலஷ்மியை  நம:
ஓம்  தனலஷ்மியை  நம:
       ஓம்  தான்யலஷ்மியை  நம:  
ஓம்  தைர்யலஷ்மியை  நம:
       ஓம்  வீரலஷ்மியை  நம:                  

ஓம்  விஜயலஷ்மியை  நம:
      ஓம்  வித்யாலஷ்மியை  நம: 
ஓம்   ஜெயலஷ்மியை நம:
       ஓம்  வரலஷ்மியை   நம:
ஓம்   கஜலஷ்மியை  நம:
      ஓம்  காமவல்யை  நம:

ஓம்  காமாஷி  ஸுந்தர்யை  நம:
       ஓம்  சுபலஷ்மியை  நம:
ஓம்   ராஜலஷ்மியை நம:
       ஓம்  க்ருஹ லஷ்மியை  நம: 
ஓம்   ஸித்தலஷ்மியை   நம:
       ஓம்  ஸீதா லஷ்மியை  நம:

ஓம்  ஸர்வ மங்கள காரிண்யை  நம:
       ஓம்  ஸர்வ துக்க நிவாரிண்யை  நம:
ஓம்   ஸர்வாங்க  ஸுந்தர்யை  நம:
       ஓம்  சௌபாக்ய லஷ்மியை  நம:
ஓம்  ஆதிலஷ்மியை   நம:
      ஓம்  ஸந்தான லஷ்மியை  நம:

ஓம்  ஆனந்த  ஸ்வரூபிண்யை  நம:
       ஓம்  அகிலாண்ட  நாயிகாயை  நம:
ஓம்  பிரம்மாண்ட  நாயிகாயை  நம: 
      ஓம்   ஸுரப்யை  நம:
ஓம்   பரமாத்மிகாயை  நம:
        ஓம்  பத்மாலயாயை  நம:

ஓம்  பத்மாயை  நம:
      ஓம்  தன்யாயை  நம:
ஓம்  ஹிரண்மையை  நம:
      ஓம்  நித்ய புஷ்பாயை  நம:
ஓம்  தீப்தாயை  நம:
       ஓம்  வஸுதாயை  நம:

ஓம்  வஸுதாரிண்யை  நம:
      ஓம்  கமலாயை  நம:
ஓம்  காந்தாயை  நம:
       ஓம்   அனுக்ரஹ ப்ரதாயை   நம:
ஓம்  அனகாயை  நம:
       ஓம்  ஹரிவல்லபாயை  நம:

ஓம்   அசோகாயை   நம:
       ஓம்  அம்ருதாயை  நம:
ஓம்   துர்காயை   நம:
       ஓம்   நாராயண்யை  நம:
ஓம்  மங்கல்யாயை  நம:
       ஓம்  க்ருஷ்ணாயை  நம:

ஓம்  கன்யாகுமரியை  நம:
       ஓம் ப்ரசன்னாயை   நம:
ஓம்  கீர்த்யை   நம:
       ஓம்   ஸ்ரீயை   நம:
ஓம்   மோஹ நாசின்யை  நம:
        ஓம்  அபம் ருத்யு  நாசின்யை  நம:

ஓம்  வ்யாதி  நாசின்யை  நம:
       ஓம்  தாரித்ரிய  நாசின்யை  நம:
ஓம்  பய நாசின்யை  நம:
       ஓம்  சரண்யாயை  நம:
 ஓம்   ஆரோக்யதாயை  நம:
         ஓம்  சரஸ்வத்யை   நம:

ஓம்   மஹா மாயாயை  நம:
      ஓம்  புஸ்தஹ   ஹஸ்தாயை  நம:
ஓம்  ஞான முத்ராயை   நம:
       ஓம்   ராமாயை   நம:
ஓம்  விமலாயை  நம:
        ஓம்  வைஷ்ணவ்யை  நம:

ஓம்  சாவித்ர்யை   நம:
       ஓம்  வாக்தேவ்யை  நம:
ஓம்  பாரத்யை   நம:
       ஓம்  கோவிந்த  ரூபிண்யை  நம:
ஓம்  சுபத்ராயை   நம:
       ஓம்  திரிகுணாயை  நம:

ஓம்  அம்பிகாயை   நம:
        ஓம்  நிரஞ்ஜனாயை  நம:
ஓம்  நித்யாயை  நம:
       ஓம்  கோமத்யை  நம:
ஓம்   மஹா பாலாயை  நம:
       ஓம்  ஹம்ஸாஸனாயை  நம:

ஓம்  வேதமாத்ரே  நம:
        ஓம்  ஸாரதாயை  நம:
ஓம்  ஸ்ரீமாத்ரே   நம:
        ஓம்  சர்வாபரண  பூஷிதாயை  நம:
 ஓம்  மஹா சக்த்யை   நம:
        ஓம்   பவான்யை   நம:

 ஓம்   பக்திப்ரியாயை  நம:
        ஓம்  சாம்பவ்யை  நம:
 ஓம்  நிர்மலாயை   நம:
       ஓம்  சாந்தாயை   நம:
ஓம்   நித்ய முக்தாயை  நம:
       ஓம்   நிஷ் களங்காயை  நம:

ஓம்  பாபநாசின்யை  நம:
       ஓம்  பேதநாசின்யை  நம:
ஓம்  ஸுகப்ரதாயை   நம:
       ஓம்  சர்வேஸ்வரியை  நம:
ஓம்   சர்வ மந்த்ர  ஸ்வரூபின்யை  நம:
       ஓம்   மனோன்மண்யை   நம:

ஓம்   மகேச்வர்யை   நம:
       ஓம் கல்யாண்யை நம:
ஓம்  ராஜ  ராஜேஷ்வர்யை   நம:
       ஓம்  பாலாயை  நம:
ஓம்   தர்மவர்த்தின்யை   நம:
      ஓம்  ஸ்ரீ  லலிதாம்பிகையை  நம:
 
ஸ்ரீஅம்பிகை   அஷ்டோத்திர  சத நாமாவளி  முற்றும்.

Saturday, August 21, 2010

ஸ்ரீ மகாலட்சுமி 108 போற்றி.....

ஓம்  அன்புலட்சுமி  போற்றி
        ஓம்  அன்னலட்சுமி  போற்றி
ஓம்   அமிர்தலட்சுமி  போற்றி
       ஓம்    அம்சலட்சுமி   போற்றி
ஓம்   அருள்லட்சுமி   போற்றி
       ஓம்  அஷ்டலட்சுமி  போற்றி                  6

ஓம்   அழகுலட்சுமி    போற்றி
        ஓம்  ஆனந்தலட்சுமி   போற்றி
ஓம்  ஆகமலட்சுமி    போற்றி
       ஓம்   ஆதிலட்சுமி   போற்றி
ஓம்   ஆத்மலட்சுமி    போற்றி
        ஓம்  ஆளும்லட்சுமி  போற்றி               12

ஓம்  இஷ்டலட்சுமி   போற்றி
         ஓம்  இதயலட்சுமி   போற்றி
ஓம்  இன்பலட்சுமி    போற்றி
        ஓம்   ஈகைலட்சுமி   போற்றி
 ஓம்   உலகலட்சுமி   போற்றி
        ஓம்  உத்தமலட்சுமி   போற்றி               18

ஓம்  எளியலட்சுமி    போற்றி
        ஓம்  ஏகாந்தலட்சுமி   போற்றி
ஓம்   ஒளிலட்சுமி   போற்றி
        ஓம்  ஓங்காராலட்சுமி   போற்றி
ஓம்   கருணைலட்சுமி   போற்றி
       ஓம்  கனகலட்சுமி   போற்றி                   24

ஓம்   கஜலட்சுமி  போற்றி
        ஓம்   கானலட்சுமி   போற்றி 
ஓம்  கிரகலட்சுமி   போற்றி
        ஓம்   குணலட்சுமி    போற்றி
ஓம்   குங்குமலட்சுமி    போற்றி
        ஓம்   குடும்பலட்சுமி    போற்றி            30   

ஓம்   குளிர்லட்சுமி  போற்றி
         ஓம்  கம்பீரலட்சுமி   போற்றி
ஓம்   கேசவலட்சுமி    போற்றி
        ஓம்  கோவில் லட்சுமி   போற்றி
ஓம்   கோவிந்தலட்சுமி   போற்றி
        ஓம்   கோமாதாலட்சுமி   போற்றி        36
 
 ஓம்  சர்வலட்சுமி  போற்றி
         ஓம்  சக்திலட்சுமி   போற்றி
 ஓம்   சக்ரலட்சுமி   போற்றி 
         ஓம் சத்தியலட்சுமி  போற்றி
  ஓம்   சங்குலட்சுமி   போற்றி
         ஓம்  சந்தானலட்சுமி   போற்றி            42

 ஓம்   சந்நிதிலட்சுமி   போற்றி
         ஓம்   சாந்தலட்சுமி    போற்றி
 ஓம்  சிங்காரலட்சுமி   போற்றி
         ஓம்  சீவலட்சுமி   போற்றி
ஓம்   சீதாலட்சுமி   போற்றி
         ஓம்   சுப்புலட்சுமி   போற்றி                  48

ஓம்  சுந்தரலட்சுமி   போற்றி
        ஓம்  சூர்யலட்சுமி   போற்றி
ஓம்   செல்வலட்சுமி   போற்றி
        ஓம்  செந்தாமரைலட்சுமி   போற்றி
ஓம்   சொர்ணலட்சுமி   போற்றி
        ஓம்   சொருபலட்சுமி    போற்றி            54

ஓம்   சௌந்தர்யலட்சுமி   போற்றி 
        ஓம்  ஞானலட்சுமி   போற்றி
 ஓம்   தங்கலட்சுமி  போற்றி
        ஓம்   தனலட்சுமி    போற்றி
  ஓம்   தான்யலட்சுமி   போற்றி
       ஓம்  திரிபுரலட்சுமி   போற்றி                  60

ஓம்  திருப்புகழ்லட்சுமி   போற்றி 
        ஓம்   திலகலட்சுமி    போற்றி
 ஓம்   தீபலட்சுமி     போற்றி
        ஓம்   துளசிலட்சுமி   போற்றி
 ஓம்  துர்காலட்சுமி   போற்றி
         ஓம்  தூயலட்சுமி   போற்றி                  66

ஓம்  தெய்வலட்சுமி   போற்றி
        ஓம்  தேவலட்சுமி    போற்றி
ஓம்   தைரியலட்சுமி   போற்றி
       ஓம்   பங்கயலட்சுமி   போற்றி
ஓம்  பாக்யலட்சுமி   போற்றி
        ஓம்  பாற்கடல்லட்சுமி   போற்றி         72

ஓம்  புண்ணியலட்சுமி   போற்றி
        ஓம்  பொருள்லட்சுமி    போற்றி
ஓம்  பொன்னிறலட்சுமி   போற்றி
         ஓம்   போகலட்சுமி    போற்றி
ஓம்   மங்களலட்சுமி   போற்றி 
        ஓம்  மகாலட்சுமி   போற்றி                  78

ஓம்   மாதவலட்சுமி   போற்றி
       ஓம்  மாதாலட்சுமி   போற்றி
ஓம்   மாங்கல்யலட்சுமி   போற்றி 
       ஓம்   மாசிலாலட்சுமி    போற்றி
ஓம்   முக்திலட்சுமி போற்றி
        ஓம்  முத்துலட்சுமி   போற்றி                84

ஓம்  மோகனலட்சுமி  போற்றி
        ஓம்  வரம்தரும்லட்சுமி   போற்றி
ஓம்  வரலட்சுமி   போற்றி
        ஓம்  வாழும்லட்சுமி   போற்றி
ஓம்   விளக்குலட்சுமி  போற்றி
       ஓம்  விஜயலட்சுமி   போற்றி                 90

ஓம்  விஷ்ணுலட்சுமி    போற்றி
       ஓம் வீட்டுலட்சுமி    போற்றி
ஓம்  வீரலட்சுமி    போற்றி           
        ஓம்  வெற்றிலட்சுமி   போற்றி
ஓம்   வேங்கடலட்சுமி     போற்றி
        ஓம்   வைரலட்சுமி   போற்றி                 96

ஓம்  வைகுண்டலட்சுமி   போற்றி
       ஓம்  நாராயணலட்சுமி   போற்றி
ஓம்   நாகலட்சுமி   போற்றி
        ஓம்   நித்தியலட்சுமி    போற்றி
ஓம்  நீங்காதலட்சுமி  போற்றி
        ஓம்  ராமலட்சுமி   போற்றி                    102

ஓம்   ராஜலட்சுமி   போற்றி
        ஓம் ஐஸ்வர்யலட்சுமி  போற்றி
ஓம்  ஜெயலட்சுமி  போற்றி
        ஓம்  ஜீவலட்சுமி  போற்றி
ஓம்  ஜோதிலட்சுமி   போற்றி
        ஓம்  ஸ்ரீலட்சுமி    போற்றி ...                  108

போற்றி ... போற்றி 
                போற்றி ... போற்றி 
                             போற்றி.... போற்றி .

Friday, August 20, 2010

ஸ்ரீ லட்சுமி அஷ்டோ த்திர சத நாமாவளி

                       
    ஸ்ரீ லட்சுமி அஷ்டோ த்திர  சத நாமாவளி

 ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வபூஹித ப்ரதாயை நம:
ஓம் ச்ரத்தாயை நம:
ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்மிகாயை நம:
                                                                                                                                                                       ஓம் வாசினே  நம:
ஓம் பத்மாலயாயை நம:
ஓம் பத்மாயை நம:
ஓம் சுசயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
                                                                                                                                                                    ஓம் ஹிரண்மய்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்யபுஷ்பாயை நம:
ஓம் விபாவர்யை நம:
ஓம் அதித்யை நம:
ஓம் திதியை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
                                                                                                                                                                    ஓம் வஸுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் க்ரோதஸம்பவாயை நம:
ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
ஓம் புத்தியே நம:
ஓம் அநகாயை நம:
                                                                                                                                                                     ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோகாயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் லோகசோக விநாசின்யை நம:
ஓம் தர்மநிலயாயை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோகமாத்ரே நம:
                                                                                                                                                                      ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பத்மோத்பவாயை நம:
ஓம் பத்மமுக்யை நம:
ஓம் பத்மநாபப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
                                                                                                                                                                     ஓம் பத்மமாலாதராயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் பத்மின்யை நம:
ஓம் பத்மகந்தின்யை நம:
ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
                                                                                                                                                                      ஓம் சுந்த்ரவதனாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ரஸஹோதர்யை நம:
ஓம் சதுர்ப்புஜாயை நம:
ஓம் சந்த்ரரூபாயை நம:
ஓம் இந்திராயை நம:
ஓம் இந்துசீதளாயை நம:
ஓம் ஆஹ்லாத-ஜனன்யை நம:
                                                                                                                                                                                  ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சிவகர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விச்வஜனன்யை நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் தாரித்ர்ய-நாசின்யை நம:
                                                                                                                                                                        ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம:
ஓம் சாந்தாயை நம:
ஓம் சுக்லமால்யாம்பராயை நம:
ஓம் ச்ரியை நம:
ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வநிலயாயை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் யசஸ்வின்யை நம:
                                                                                                                                                                         ஓம் வஸுந்தராயை நம:
ஓம் உதாராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேமமாலின்யை நம:
ஓம் தனதான்யகர்யை நம:
ஓம் ஸித்தயே நம:
ஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை நம:
ஓம் சுபப்ரதாயை நம:
                                                                                                                                                                       ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம:
ஓம் வரலக்ஷ்ம்யை நம:
ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் சுபாயை நம:
ஓம் ஹிரண்ய  ப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ர தனயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்களா தேவ்யை நம:
                                                                                                                                                                        ஓம் விஷ்ணு வக்ஷஸ்தல ஸ்திதாயை நம:
ஓம் விஷ்ணு பத்ன்யை நம:
ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம:
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம:
ஓம் தேவ்யை நம:
                                                                                                                                                                         ஓம் ஸர்வோபத்ரவ-வாரிண்யை நம:
ஓம் நவதுர்காயை நம:
ஓம் மஹாகா
ளியை நம:
ஓம் ப்ரஹ்மவிஷ்ணு- சிவாத்மிகாயை நம:
ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம:
ஓம் புவனேஸ்வர்யை நம:

                                                                                                                                                                       ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்

Monday, August 9, 2010

சிவபெருமான் 108 போற்றி...

                                                                                                  ஓம்  அப்பா  போற்றி
                                                ஓம்  அரசனே  போற்றி
                                          ஓம் அரசே  போற்றி
                                                 ஓம் அமுதே  போற்றி
                                            ஓம் அழகே  போற்றி
                                               ஓம்  அத்தா போற்றி                                                                               ஓம்  அற்புதா  போற்றி
                                           ஓம்  அறிவா  போற்றி            8

                                    ஓம் அம்பலவா  போற்றி
                             ஓம் அரியோய்  போற்றி
                                     ஓம் அருந்தவா  போற்றி
                               ஓம்  அணியே  போற்றி
                                      ஓம்  அண்டா  போற்றி
                              ஓம்  ஆதியே  போற்றி
                                      ஓம்  ஆறங்கா  போற்றி
                               ஓம்  ஆரமுதே   போற்றி                  16

                                       ஓம்  ஆறணு  போற்றி
                                ஓம்  ஆண்டவா   போற்றி   
                                        ஓம்  ஆலவாயா  போற்றி
                               ஓம்  ஆருரா  போற்றி
                                        ஓம்  இறைவா  போற்றி
                                ஓம்  இடபா  போற்றி
                                        ஓம்   இன்பா  போற்றி
                                 ஓம்  ஈசா  போற்றி                            24

                                ஓம்  உடையாய்  போற்றி
                                         ஓம் உணர்வே  போற்றி
                                 ஓம்   உயிரே  போற்றி

                                          ஓம்  ஊழியே  போற்றி
                                 ஓம்  எண்ணே   போற்றி
                                           ஓம்  எழுத்தே  போற்றி
                                 ஓம்  எண்குணா  போற்றி
                                          ஓம்  எழிலா  போற்றி             32

                                  ஓம்  எளியா  போற்றி
                                            ஓம்  ஏகா   போற்றி
                                  ஓம்  ஏழிசையே    போற்றி
                                            ஓம்  ஏறுர்ந்தா  போற்றி
                                 ஓம்  ஐயா  போற்றி
                                            ஓம்  ஒருவா  போற்றி
                                 ஓம்  ஒப்பிலா  போற்றி
                                           ஓம் ஒளியா  போற்றி           40

                               ஓம்  ஒலியா  போற்றி 
                                       ஓம் ஓங்காரா  போற்றி
                               ஓம்  கடம்பா  போற்றி
                                       ஓம் கதிரே  போற்றி
                                ஓம்  கதியே  போற்றி
                                       ஓம்  கனியே  போற்றி
                                ஓம்  கலையா   போற்றி
                                      ஓம்  காருண்யா  போற்றி        48
         
                               ஓம்  குறியே  போற்றி
                                       ஓம் குருவே  போற்றி
                               ஓம்  குணமே  போற்றி
                                        ஓம்  கூத்தா  போற்றி
                              ஓம்   சடையா  போற்றி
                                        ஓம்  சங்கரா  போற்றி
                              ஓம்   சதுரா  போற்றி
                                       ஓம்  சதாசிவா  போற்றி           56
                                     
                               ஓம்   சிவமே  போற்றி
                                          ஓம்  சிறமே   போற்றி
                             ஓம் சித்தா  போற்றி
                                       ஓம்  சீரா  போற்றி
                             ஓம்  சுடரே  போற்றி
                                      ஓம் சுந்தரா  போற்றி
                             ஓம்  செல்வா  போற்றி
                                      ஓம்  செங்கணா  போற்றி         64

                           ஓம்  செம்பொனா  போற்றி
                                    ஓம்  சொல்லே   போற்றி
                            ஓம்  ஞாயிரே  போற்றி
                                    ஓம்  ஞானமே  போற்றி
                            ஓம்  தமிழே   போற்றி
                                     ஓம் தத்துவா  போற்றி
                            ஓம்   தலைவா  போற்றி
                                     ஓம்  தந்தையே   போற்றி          72

                           ஓம்   தாயே  போற்றி
                                     ஓம்  தாண்டவா  போற்றி
                           ஓம்  திங்களே  போற்றி
                                     ஓம்  திசையே  போற்றி
                           ஓம்   திரிசூலா  போற்றி
                                     ஓம்  துணையே  போற்றி
                           ஓம்  தெளிவே  போற்றி
                                     ஓம்  தேவதேவா  போற்றி         80

                            ஓம்   தேழா  போற்றி
                                      ஓம்  நமசிவாயா  போற்றி
                            ஓம்  நண்பா  போற்றி
                                      ஓம்  நஞ்சுண்டா  போற்றி
                            ஓம்  நான்மறையா  போற்றி
                                     ஓம்  நிறைவே  போற்றி
                             ஓம்  நினைவே  போற்றி
                                      ஓம்  நீலகண்டா  போற்றி         88
                            
                            ஓம்  நெறியே  போற்றி
                                    ஓம்  பண்ணே  போற்றி
                            ஓம்   பித்தா  போற்றி
                                     ஓம்  புனிதா  போற்றி
                           ஓம்  புராணா  போற்றி
                                     ஓம் பெரியோய்   போற்றி
                            ஓம்  பொருளே  போற்றி
                                     ஓம்  பொங்கரவா  போற்றி       96

                           ஓம்  மணியே  போற்றி
                                   ஓம்  மதிசூடியே  போற்றி
                           ஓம்  மருந்தே   போற்றி
                                   ஓம் மலையே  போற்றி
                            ஓம்  மஞ்சா  போற்றி
                                ஓம்  மணாளா  போற்றி                  102

                      ஓம்   மெய்யே  போற்றி
                                ஓம்  முகிலே  போற்றி
                       ஓம்  முத்தா  போற்றி
                                ஓம்  முதல்வா  போற்றி
                       ஓம்  வாழ்வே  போற்றி
                                ஓம்  வைப்பே  போற்றி                   108 

              தென்னாடுடைய  சிவனே  போற்றி ...
                       என்னாட்டவர்க்கும்    இறைவா  போற்றி ...
              வேதிய  வேதா  கிதா,  விண்ணவர்  அண்ணா
                     என்றென்று  ஓதியே  மலர்கள் தூவி 
             ஒருங்கி  நின் கழல்கள் காணப்  பாதியோர்
                    பெண்ணை  வைத்தாய் , படர்சடை  மதியம்
             சூடும்  ஆதியே, ஆலவாயில்  அப்பனே

                      நீவிர்  எம் அன்னையரோடு  அருள் செய
             வரும்போதே, ஞாயிறு   திங்கள்  செவ்வாய்
                   புதன்   குரு   வெள்ளி   சனி  பாம்பிரண்டு ,
           அனைத்து  நவக் கிரகங்களும்  எமக்கு  நல்லன
                  செய்யும்  வண்ணம்  நிலை நிறுத்தி - எம்
         அன்னையரோடு நின்று  அருள்  செய்ய  வருகவே ...  !!!

Friday, August 6, 2010

சில பொதுவான பூஜைக் குறிப்புகள்

      விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)
                                                                                                                                                                           பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, வில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
                                                                                                                                                           விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.
                                                                                                                                                                               அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.
                                                                                                                                                                   லட்சுமிக்குத் தும்பை கூடாது.
                                                                                                                                                                  பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
                                                                                                                                                                      விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.
                                                                                                                                                                  துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
                                                                                                                                                                  மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
                                                                                                                                                                வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
                                                                                                                                                                அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
                                                                                                                                                                 ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.
                                                                                                                                                                தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதி இல்லை.
                                                                                                                                                                வாசனை இல்லாதது: முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது. வாடியது: தகாதவர்களால் தொடப்பட்டது; நுகரப்பட்டது: ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.
                                                                                                                                                                சம்பக மொக்குத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
                                                                                                                                                                மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.
                                                                                                                                                                 முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
                                                                                                                                                                துளசி, முகிழ் (மகிழம்) செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுரவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.
                                                                                                                                                                  பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை,  புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
                                                                                                                                                                திருவிழாக் காலத்திலும், வீதிவலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும், மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.
                                                                                                                                                                 அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.
                                                                                                                                                                குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
                                                                                                                                                                பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.
                                                                                                                                                                கோயில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.
                                                                                                                                                                  பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும்; தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா.
                                                                                                                                                                ஒன்று, மூன்று, ஐந்து, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்துக்கு மஹாதீபம் அல்லது மஹாநீராஜனம் என்ற பெயர்.                                                                                                                                                                                                                                                                                            Thanks to :    www.prabandham.com