Sunday, July 25, 2010

சித்தர்கள் 108 போற்றி

                            சித்தர்கள் போற்றித் தொகுப்பை  அனுதினமும்  பாராயணம்  செய்துவர பாவங்கள்  நீங்கி  புண்ணியம்  பெருகும் .எல்லாவிதத்  துன்பங்களும்  முடிவுக்கு வர சித்தர்கள்  அருளாசி  கிட்டும். 

                                                                                                   சித்தர்கள் காப்பு                                 
                         காப்பான  கருவூரார்  போகநாதர் 
                               கருணையுள்ள  அகத்தீசர்  சட்டைநாதர் 
                     மூப்பான  கொங்கணரும்  பிரம்ம சித்தர் 
                           முக்கியமாய்  மச்சமுனி  நந்திதேவர் 
                கோப்பான  கோரக்கர்  பதஞ்சலியார் 
                         கூர்மையுள்ள  இடைக்காடர்  சண்டிகேசர்  
            வாப்பான  வாதத்திற்கு  ஆதியான                                                            வாசமுனி  கமலமுனி  காப்புத்  தானே                                     

              
                 ஓம்  ஆதிநாதர்  திருவடிகள்  போற்றி 
        ஓம்   அநாதிநாதர்  திருவடிகள் போற்றி
                   ஓம்  சத்தியநாதர்  திருவடிகள் போற்றி 
        ஓம்  சகோதநாதர்   திருவடிகள்  போற்றி 
                  ஓம்   வகுளிநாதர்  திருவடிகள் போற்றி 
        ஓம்   மதங்கநாதர்  திருவடிகள் போற்றி                 6 

                 ஓம் மச்சேந்திரநாதர்  திருவடிகள் போற்றி 
       ஓம்  கடேந்திரநாதர்   திருவடிகள் போற்றி 
                 ஓம் கோரக்கநாதர்  திருவடிகள்  போற்றி 
      ஓம்  நந்தீசர்  திருவடிகள் போற்றி 
                  ஓம்  திருமூலர்  திருவடிகள்  போற்றி 
      ஓம்  அகஸ்தியர்  திருவடிகள் போற்றி                      12 


                ஓம்  புலஸ்தியர்  திருவடிகள் போற்றி 
     ஓம்  போகர்  திருவடிகள் போற்றி 
                ஓம்  கொங்கணர்  திருவடிகள் போற்றி 
    ஓம்  கருவூரார்  திருவடிகள்  போற்றி 
                ஓம்  காலங்கிநாதர்  திருவடிகள் போற்றி 
    ஓம்  இடைக்காடர்  திருவடிகள்  போற்றி                   18 


               ஓம்  பத்திரகிரியார்  திருவடிகள் போற்றி 
    ஓம்  சிவவாக்கியர்  திருவடிகள் போற்றி 
             ஓம்  இராமதேவர்  திருவடிகள் போற்றி 
   ஓம்  கமலமுனி  திருவடிகள் போற்றி  
              ஓம்  சுந்தரானந்தர்  திருவடிகள் போற்றி 
   ஓம்  பூர்ணானந்தர்  திருவடிகள் போற்றி                    24 


                ஓம் ரோமரிஷி  திருவடிகள் போற்றி 
     ஓம்  திருவள்ளுவர்  திருவடிகள் போற்றி 
               ஓம்  காகபுஜண்டர்   திருவடிகள்  போற்றி 
     ஓம் ஔவையார்  திருவடிகள்  போற்றி 
                 ஓம்  தன்வந்திரி  திருவடிகள் போற்றி 
     ஓம் வால்மீகர்  திருவடிகள் போற்றி                          30 

               ஓம்  புண்ணாக்கீசர்  திருவடிகள் போற்றி 
   ஓம்  பூனைக்கண்ணனார் திருவடிகள் போற்றி 
             ஓம் அழுகண்ணிச் சித்தர்  திருவடிகள் போற்றி 
  ஓம்  அகப்பேய்  சித்தர் திருவடிகள் போற்றி 
                    ஓம்  தேரையர்  திருவடிகள்  போற்றி 
   ஓம்  குதம்பைச் சித்தர்  திருவடிகள் போற்றி             36  


              ஓம்  சட்டைமுனி  திருவடிகள் போற்றி 
  ஓம்  பாம்பாட்டிச் சித்தர் திருவடிகள் போற்றி 
              ஓம்  பட்டினத்தார்  திருவடிகள் போற்றி 
  ஓம்  பதஞ்சலியார்  திருவடிகள் போற்றி 
               ஓம்  நாரதர்  திருவடிகள் போற்றி 
  ஓம்  விஸ்வாமித்திரர்  திருவடிகள் போற்றி              42 

              ஓம்  காரைச்சித்தர்  திருவடிகள் போற்றி 
 ஓம் நாகார்ஜுனர்  திருவடிகள் போற்றி 
            ஓம்  வாசுகியார்  திருவடிகள் போற்றி 
 ஓம்  திருமாளிகைத் தேவர்  திருவடிகள் போற்றி 
             ஓம்  குமாரத்தேவர்  திருவடிகள் போற்றி 
 ஓம்   அருணகிரிநாதர்   திருவடிகள் போற்றி              48 


             ஓம் தாயுமானவர்  திருவடிகள் போற்றி 
  ஓம்   வள்ளலார்  திருவடிகள்  போற்றி 
             ஓம்  முத்துத்தாண்டவர்   திருவடிகள் போற்றி 
  ஓம்  காரைக்கால்  அம்மையார்  திருவடிகள் போற்றி 
            ஓம்  பராசரர்  திருவடிகள் போற்றி 
   ஓம்  ஹனுமான்  திருவடிகள் போற்றி                         54  


              ஓம்  புலிப்பாணி சித்தர்  திருவடிகள் போற்றி 
   ஓம்  கல்லுளி  சித்தர்  திருவடிகள் போற்றி  
              ஓம்   கணநாதர்  திருவடிகள் போற்றி 
   ஓம்   குமரகுருபரர்  திருவடிகள் போற்றி 
               ஓம்  திருதட்சியாமூர்த்தி  திருவடிகள் போற்றி 
    ஓம்  கௌசிகர்  திருவடிகள்  போற்றி                             60 

                ஓம்  சண்டிகேசர்  திருவடிகள்  போற்றி 
    ஓம்  சுகப்பிரம்மர்   திருவடிகள் போற்றி 
                  ஓம்   டமரானந்தர்  திருவடிகள்  போற்றி 
     ஓம்   தாயுமானவர்  திருவடிகள் போற்றி 
                 ஓம்   கபிலர்  திருவடிகள் போற்றி 
     ஓம்  அல்லமாபிரபு  திருவடிகள்  போற்றி                   66 

                  ஓம்   காசிபர்  திருவடிகள் போற்றி 
     ஓம்  கவுபால சித்தர்  திருவடிகள் போற்றி 
                 ஓம் குருராஜர்   திருவடிகள் போற்றி 
      ஓம்  கெளதமர்  திருவடிகள்  போற்றி 
                 ஓம்  சங்கர மகரிஷி  திருவடிகள் போற்றி 
       ஓம்  சுந்தரமூர்த்தி  திருவடிகள் போற்றி                      72 


                   ஓம்   சூரியானந்தர்  திருவடிகள் போற்றி 
        ஓம்  சொரூபானந்தர்  திருவடிகள்  போற்றி 
                   ஓம் ஜம்பு மகரிஷி  திருவடிகள் போற்றி 
         ஓம்  ஜனகர்   திருவடிகள் போற்றி 
                    ஓம்  ஜெகன்நாதர்  திருவடிகள் போற்றி 
          ஓம்  ஞானசித்தர்  திருவடிகள் போற்றி                       78 
                    
                    ஓம்  திருநாவுக்கரசர்  திருவடிகள் போற்றி 
        ஓம்  திருஞானசம்பந்தர்  திருவடிகள்  போற்றி 
                   ஓம்  துர்வாச முனிவர்  திருவடிகள் போற்றி 
        ஓம்  நந்தனார்  திருவடிகள் போற்றி 
                    ஓம்  பரத்வாசர்  திருவடிகள் போற்றி 
         ஓம்  பரமானந்தர்  திருவடிகள்  போற்றி                        84 


                   ஓம் பிங்கள முனிவர்  திருவடிகள் போற்றி 
         ஓம்  பிருகு முனிவர்  திருவடிகள்  போற்றி 
                  ஓம் பீர்முஹம்மது  திருவடிகள் போற்றி 
          ஓம்   புலத்தீசர்  திருவடிகள் போற்றி 
                  ஓம்  மச்சமுனி திருவடிகள் போற்றி 
          ஓம்  மாணிக்கவாசகர்  திருவடிகள்  போற்றி              90   


                    ஓம்  மார்க்கண்டேயர்  திருவடிகள் போற்றி 
          ஓம்  முத்தானந்தர்  திருவடிகள் போற்றி 
                    ஓம் மெய்கண்டதேவர்  திருவடிகள் போற்றி 
           ஓம்  மௌனசித்தர்  திருவடிகள்  போற்றி 
                    ஓம்  யாக்கோபு  சித்தர் திருவடிகள் போற்றி 
           ஓம்  வரரிஷி  திருவடிகள் போற்றி                                 96 

                      ஓம்  வியாச முனிவர்  திருவடிகள்  போற்றி 
            ஓம்  விளையாட்டு சித்தர்  திருவடிகள் போற்றி 
                     ஓம் மிருகண்ட  மகரிஷி  திருவடிகள்  போற்றி 
          ஓம்  சீரடிபாபா  திருவடிகள் போற்றி 
                      ஓம்  வசிஷ்ட  மகரிஷி  திருவடிகள் போற்றி 
          ஓம்  யூகி  முனிவர்  திருவடிகள் போற்றி                       102 

                   ஓம்  சூலமுனிவர்  திருவடிகள் போற்றி 
           ஓம்  குகை நமச்சிவாயர்  திருவடிகள் போற்றி 
                   ஓம்  கடைப்பிள்ளை  திருவடிகள் போற்றி 
          ஓம்   வேதவியாசர்  திருவடிகள் போற்றி 
                   ஓம்  கணபதிதாசர்  திருவடிகள்  போற்றி 
            ஓம்   சட்டநாதர்   திருவடிகள் போற்றி                         108                                                                                                                                                                                                                                                                                                                                                                 ஓம்  எண்ணிலாக்கோடி    சித்தரிஷி கணங்கள்                                                 திருவடிகள்  போற்றி ...!   போற்றி...!    போற்றி...!      போற்றி...!











                       






















Sunday, July 11, 2010

விநாயகர் 108 போற்றி ....

              ஓம் எனும் பொருளாய் உள்ளோய்  போற்றி
     ஒம் பூமனம் பொருள்  தொறும் பொலிவாய் போற்றி
              ஓம்  அகரம்  முதலென  ஆனாய் போற்றி
    ஓம் அகர உகர ஆதி  போற்றி
                ஓம்   மகரமாய் நின்ற  வானவ போற்றி
     ஓம் பகர் முன்னவனாம் பரனே  போற்றி                              6

             ஓம் மண்ணாய்  விண்ணாய் மலர்ந்தாய் போற்றி
      ஓம்  கண்ணுள்  மணியாய்  கலந்தாய் போற்றி
              ஓம்  நீர்தீக்  காற்றாய் நின்றாய்  போற்றி
       ஓம்   கார்குளிராக  கனிந்தாய் போற்றி
              ஓம் பகலவன்  நிலவாய்  பரந்தாய்  போற்றி
       ஓம்  நிகர்மீன்  கணமாய் நிலைத்தாய்   போற்றி                12

               ஓம் மழைபொழி  இமய வல்லிசேய்  போற்றி
      ஓம்  தழைசெவி  எண்தோள்  தலைவ  போற்றி
               ஓம் திங்கட்  சடையோன்  செல்வ   போற்றி
     ஓம் எங்களுக்கு  அருளும்  இறைவா  போற்றி
               ஓம் ஆறுமுகச்  செவ்வேட்க்கு  அண்ணா  போற்றி
      ஓம் சிறுகண்  களிற்றுத் திருமுக  போற்றி                             18

               ஓம்  செம்பொன்  மேனிச்  செம்மால்   போற்றி
    ஓம்  உம்பர்  போற்றும் உம்பல்  போற்றி
               ஓம் பண்ணியம்  ஏந்துகைப்  பண்ணவ  போற்றி
    ஓம்  எண்ணிய  எண்ணியாங்கு  இசைப்பாய்  போற்றி
              ஓம் அப்பமும்  அவலும்  கப்புவாய்  போற்றி
    ஓம் முப்புரி  நூல்மார்பு  அப்பா போற்றி                                       24

             ஓம்  எள்ளுருண்டை  பொறி ஏற்பாய்  போற்றி
     ஓம் தெள்ளறு  தெவிட்டாத்   தேனே  போற்றி
             ஓம்  மூவர்  மொழியிடம்  மொழிந்தாய்  போற்றி
      ஓம் தேவர்க்கு  அரிய தேவா போற்றி
              ஓம்  மாலுக்கு  அருளிய  மதகரி  போற்றி
      ஓம் பாலெனக்  கடல்நீர்  பருகினாய்  போற்றி                         30

              ஓம்  பாரதம் எழுதிய  பருஉக்கர  போற்றி
       ஓம் மா ரதம்  அச்சொடி  மதவலி  போற்றி
              ஓம் மாங்கனி  அரன்பால்  வாங்கினோய்  போற்றி
       ஓம் ஈங்கினி  எம்பால்  எழுந்தருள்  போற்றி
               ஓம்  கரும்பு  ஆயிரம்கொள்  கள்வா  போற்றி
        ஓம் அரும்பொருளே  எம்  ஐயா போற்றி                                   36
       
                ஓம்  திணைபால்  கடந்த  தேவே  போற்றி
       ஓம்  புணையாய்  இடர்க்கடல்  போக்குவாய்  போற்றி
               ஓம் பேழை  வயிற்றுப்  பெம்மான்  போற்றி
       ஓம்  ஏழைக்கு  இரங்கும்  எம் இறை  போற்றி
              ஓம்  அடியவர்  உள்ளம்  அமர்ந்தாய் போற்றி
       ஓம்  அடிமலர்  எம்தலை  அணிவாய் போற்றி                         42
     
             ஓம்  திருநீற்று  ஒளிசேர்  செம்மால் போற்றி
      ஓம்   இரு வேறு  உருவ  ஈசா  போற்றி
               ஓம்  உள்ளத்து  இருளை  ஒழிப்பாய்  போற்றி
      ஓம்  கள்ளப்  புலனைக்  கரைப்பாய்  போற்றி
               ஓம்  நம்பியாண்டார்க்கு  அருள்  நல்லாய்  போற்றி
     ஓம்  எம்பிரானாக  இனிதே  இசைந்தாய்  போற்றி                                        48

              ஓம்  உருகுவோர்  உள்ளத்து  ஒளியே  போற்றி
    ஓம்  பெருகு  அருள்  சுரக்கும்  பெருமான்  போற்றி
              ஓம்  தம்பிக்கு  வள்ளியைத்  தந்தாய்  போற்றி
   ஓம்   உம்பர்கட்கு  அரசே  ஒருவ  போற்றி
              ஓம்   பிள்ளையார்ப்  பெயர்கொண்டு  உள்ளாய்  போற்றி
    ஓம்  வள்ளலாய்  நலன்கள்  வழங்குவாய் போற்றி                       54

             ஓம் மூவாச் சாவா  முத்தா போற்றி
    ஓம்  ஆவா  எங்களுக்கு  அருள்வாய்  போற்றி
            ஓம் தமிழ்ச்சுவை  சார்திருச் செவியோய்  போற்றி
    ஓம் அமிழ்தாய்  எம்மகத்து  ஆனாய்  போற்றி
           ஓம்  மழவிளங்களிரே  மணியே  போற்றி
    ஓம்   குழவியாய்  சிவன்மடி  குலவுவோய்   போற்றி                    60

           ஓம் பெருச்சாளியூரும்  பிரானே போற்றி
    ஓம்  நரிச் செயலார்பால்  நண்ணாய்  போற்றி
           ஓம்  செந்தாமரைத்  தாள்  தேவா  போற்றி
    ஓம் நந்தா மணியே நாயக  போற்றி
            ஓம் இருள்சேர்  இருவினை  எறிவாய் போற்றி
    ஓம்  கரிமுகத்து  எந்தாய் காப்போய்  போற்றி                                 66

           ஓம்  ஆங்காரம்முளை  அறுப்பாய்  போற்றி
   ஓம்  பாங்கார்  இன்பப்  பராபர  போற்றி
           ஒம் கற்றவர் விழுங்கும்  கனியே  போற்றி
    ஓம்   மற்றவர் காணா  மலையே  போற்றி
           ஓம்  சொல்லொடு  பொருளின்  தொடர்பே  போற்றி
    ஓம்  கல்லும்  கரைக்க  வல்லோய்  போற்றி                                  72

           ஓம் தொந்தி வயிற்றுத் தந்தி போற்றி
   ஒம் முந்திய பொருட்கும்  முந்தியோய்  போற்றி
          ஓம் ஐந்து கை உடைய  ஐய  போற்றி
  ஓம்  ஐந்தொழில்  ஆற்றும்  அமர  போற்றி
          ஓம் அருளாய்  அருள்வாய்  ஆண்டவ  போற்றி
  ஓம்  தருவாய்  மணமலர்த் தாராய்  போற்றி                                 78

         ஓம்  கயமுக அசுரனைக் காய்ந்தாய்  போற்றி
 ஓம்  மயலரும்  இன்ப  வாழ்வே  போற்றி
         ஓம்  ஆனையாய்  புழுவாய்  ஆனாய்  போற்றி
 ஒம் பானை  வயிறறுப் பரமே  போற்றி
         ஓம்  கடம்பொழி  யானைக் கன்றே  போற்றி
 ஓம்  மடம்ஒழி  அறிவின் வளனே போற்றி                                      84

         ஓம் பாலொடு  தேனும்  பருகுவோய் போற்றி
 ஓம்  மேலோட கீழாய்  மிளிர்வோய்  போற்றி
         ஓம்  எய்ப்பில் வைப்பாய்  இருந்தோய்  போற்றி
 ஓம் மெய்ப்பொருள் வேழ  முகத்தான்  போற்றி
         ஓம்  நல்லார்க்கு  எட்டும்  நாதா  போற்றி
  ஓம்  பொல்லா  மணியே  புராதன  போற்றி                                     90

         ஓம்  அறிவின்  வரம்பில்  அகன்றாய்  போற்றி
  ஓம் குறிகுணம்  கடந்த குன்றே  போற்றி
          ஓம்  எட்டு வான்குணத்து எந்தாய் போற்றி
  ஓம்  கட்டறு  களிற்று  முகத்தோய்  போற்றி
          ஓம்  மலரில்  மணமாய்  வளர்ந்தாய்  போற்றி
  ஓம்  அலர் கதிர் ஒளியில்  அமர்வோய்  போற்றி                           96

           ஓம் ஓங்காரம்  முகத்து  ஒருத்தல்  போற்றி
  ஓம்  ஏங்காது  உயிர்க்கு  அருள் இயற்கை போற்றி
          ஓம் எண்ணும் எழுத்துமாய்  இசைந்தாய்  போற்றி
  ஓம்  பண்ணும்  பயனுமாய்  பரந்தாய்  போற்றி
         ஓம் அருவே  உருவே  அருஉரு  போற்றி
  ஓம்  பொருளே  பொருளின்  புணர்ப்பே  போற்றி                             102

          ஓம் புகர்முகக்  களிற்றுப்  புண்ணிய  போற்றி
 ஓம்  அகலிடம்  நிறைய  அமர்ந்தோய்  போற்றி
          ஓம்  செல்வம் அருள்க  தேவா போற்றி 
 ஓம்  நல்லன  எமக்கருள்  நாயக  போற்றி
         ஓம் ஆக்கமும்  ஊக்கமும்  அருள்வாய்  போற்றி
 ஓம்  காக்க எங்களை  உன்  கழலினைப்   போற்றியே  ....               108

             ..... திருசசிற்றம்பலம் ...........

Sunday, July 4, 2010

காரிய சித்தி மாலை விநாயகர் அஷ்டகம்

 
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

பொருள்: எல்லாவிதமான பற்றுகளையும் அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும் இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும் மறைத்தும் லீலைகள் செய்பவனும் வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை அன்புடன் தொழுவோம்.
உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர், உலகில் நிகழும் மாற்றங்கட்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர், அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப்பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரண் அடைவோம்.
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.

பொருள்: நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாபங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னார் திருவடிகளைச் சரண் அடைவோம்.
மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந் திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவரும் ஆகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரண் அடைவோம்.
செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: செயல்களாகவும், செய்யப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப் பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்தும் நம்மை விடுப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த் மெய்யான தெய்வதை நாம் சரண் அடைவோம்.
வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: வேதங்களுக்கு எல்லம் தலைவனாக இருப்பவனும், யாவராலும் அறிந்து கொள்ளுதற்கு அரிய மேலானவனாக இருப்பவனும், வேதத்தின் முடிவாக இருந்து நடம் புரியும் குற்ற மற்றவனும், வெட்ட வெளியில் எழும் ஒங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவனும், தன்வயத்தனாதல்; தூய உடம்பினன் ஆதல்; இயற்கை உணர்வினன் ஆதல்; முற்றும் உணர்தல்; இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல்; பொருள் உடைமை; முடிவில் ஆற்றல் உடைமை; வரம்பில் இன்பம் உடைமை, இவற்றை முறையே வட நூலார் சுதந்தரத்துவம் விசுத்த தேகம்; நிரன்மயான்மா ; சர்வஞ்த்வம்; அநாதிபேதம்;அநுபத சக்தி; அநந்த சக்தி; திருப்தி ஆகிய எட்டுக் குணங்களைக் கொண்டவனும், ஆன முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரண் அடைவோம்.
மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பொருள்: மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும்,ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ,சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவரு மாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரண் அடைவோம்.
பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

பொருள்: எந்தப் பந்தமும் அற்றவன்; பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே! அறிவினால் அவனை அறியமுடியாது. அவன் பந்தமே இல்லாதவன். ஆனால் எல்லா உயிர்களையும் பந்தப்படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரண் அடைவோம். பசு பதி இரண்டுமே இறைவன். பசு பதியோடு ஒடுங்குவதே அழியா இன்ப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.

நூற்பயன்

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.
பொருள்; இத்தோத்திரப் பாடல்களை மூன்று நாட்கள் சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ அவர்கள் செய்யும் நற்காரியங்களில் வெற்றிபெறுவார்கள். தொடர்ந்து எட்டு நாட்கள் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள். சதுர்த்தியன்று நற்சிந்தையுடன் எட்டுத் தடவவைகள் பாராயணம் செய்தால் அணிமா, கரிமா, இலஹிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசீதை போன்ற (எட்டு) அட்டமாசித்துளையும் பெறுவார்கள்.
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்
பொருள்: தொடர்ந்து இரு மாதங்கள் நாள் தோறும் முறையாகப் பாராயணம் செய்தால் அரசர்களும் வசியம் ஆவார்கள். தினமும் இருபத்தோரு முறைகள் பாராயணம் செய்தால் குழந்தைச் செல்வம், கல்விச் செல்வம் நலம் போன்ற சகல செவங்களும் வந்துசேரும்                             
                                                                                                                                                                     காசிப முனிவர் இயற்றியது,  கச்சியப்பர்மொழிபெயர்த்தது                                                                                                                                                      உரை எழுதியவர்: திருப்பனந்தாள் புலவர் க. துரியானந்தம்..