Sunday, July 11, 2010

விநாயகர் 108 போற்றி ....

              ஓம் எனும் பொருளாய் உள்ளோய்  போற்றி
     ஒம் பூமனம் பொருள்  தொறும் பொலிவாய் போற்றி
              ஓம்  அகரம்  முதலென  ஆனாய் போற்றி
    ஓம் அகர உகர ஆதி  போற்றி
                ஓம்   மகரமாய் நின்ற  வானவ போற்றி
     ஓம் பகர் முன்னவனாம் பரனே  போற்றி                              6

             ஓம் மண்ணாய்  விண்ணாய் மலர்ந்தாய் போற்றி
      ஓம்  கண்ணுள்  மணியாய்  கலந்தாய் போற்றி
              ஓம்  நீர்தீக்  காற்றாய் நின்றாய்  போற்றி
       ஓம்   கார்குளிராக  கனிந்தாய் போற்றி
              ஓம் பகலவன்  நிலவாய்  பரந்தாய்  போற்றி
       ஓம்  நிகர்மீன்  கணமாய் நிலைத்தாய்   போற்றி                12

               ஓம் மழைபொழி  இமய வல்லிசேய்  போற்றி
      ஓம்  தழைசெவி  எண்தோள்  தலைவ  போற்றி
               ஓம் திங்கட்  சடையோன்  செல்வ   போற்றி
     ஓம் எங்களுக்கு  அருளும்  இறைவா  போற்றி
               ஓம் ஆறுமுகச்  செவ்வேட்க்கு  அண்ணா  போற்றி
      ஓம் சிறுகண்  களிற்றுத் திருமுக  போற்றி                             18

               ஓம்  செம்பொன்  மேனிச்  செம்மால்   போற்றி
    ஓம்  உம்பர்  போற்றும் உம்பல்  போற்றி
               ஓம் பண்ணியம்  ஏந்துகைப்  பண்ணவ  போற்றி
    ஓம்  எண்ணிய  எண்ணியாங்கு  இசைப்பாய்  போற்றி
              ஓம் அப்பமும்  அவலும்  கப்புவாய்  போற்றி
    ஓம் முப்புரி  நூல்மார்பு  அப்பா போற்றி                                       24

             ஓம்  எள்ளுருண்டை  பொறி ஏற்பாய்  போற்றி
     ஓம் தெள்ளறு  தெவிட்டாத்   தேனே  போற்றி
             ஓம்  மூவர்  மொழியிடம்  மொழிந்தாய்  போற்றி
      ஓம் தேவர்க்கு  அரிய தேவா போற்றி
              ஓம்  மாலுக்கு  அருளிய  மதகரி  போற்றி
      ஓம் பாலெனக்  கடல்நீர்  பருகினாய்  போற்றி                         30

              ஓம்  பாரதம் எழுதிய  பருஉக்கர  போற்றி
       ஓம் மா ரதம்  அச்சொடி  மதவலி  போற்றி
              ஓம் மாங்கனி  அரன்பால்  வாங்கினோய்  போற்றி
       ஓம் ஈங்கினி  எம்பால்  எழுந்தருள்  போற்றி
               ஓம்  கரும்பு  ஆயிரம்கொள்  கள்வா  போற்றி
        ஓம் அரும்பொருளே  எம்  ஐயா போற்றி                                   36
       
                ஓம்  திணைபால்  கடந்த  தேவே  போற்றி
       ஓம்  புணையாய்  இடர்க்கடல்  போக்குவாய்  போற்றி
               ஓம் பேழை  வயிற்றுப்  பெம்மான்  போற்றி
       ஓம்  ஏழைக்கு  இரங்கும்  எம் இறை  போற்றி
              ஓம்  அடியவர்  உள்ளம்  அமர்ந்தாய் போற்றி
       ஓம்  அடிமலர்  எம்தலை  அணிவாய் போற்றி                         42
     
             ஓம்  திருநீற்று  ஒளிசேர்  செம்மால் போற்றி
      ஓம்   இரு வேறு  உருவ  ஈசா  போற்றி
               ஓம்  உள்ளத்து  இருளை  ஒழிப்பாய்  போற்றி
      ஓம்  கள்ளப்  புலனைக்  கரைப்பாய்  போற்றி
               ஓம்  நம்பியாண்டார்க்கு  அருள்  நல்லாய்  போற்றி
     ஓம்  எம்பிரானாக  இனிதே  இசைந்தாய்  போற்றி                                        48

              ஓம்  உருகுவோர்  உள்ளத்து  ஒளியே  போற்றி
    ஓம்  பெருகு  அருள்  சுரக்கும்  பெருமான்  போற்றி
              ஓம்  தம்பிக்கு  வள்ளியைத்  தந்தாய்  போற்றி
   ஓம்   உம்பர்கட்கு  அரசே  ஒருவ  போற்றி
              ஓம்   பிள்ளையார்ப்  பெயர்கொண்டு  உள்ளாய்  போற்றி
    ஓம்  வள்ளலாய்  நலன்கள்  வழங்குவாய் போற்றி                       54

             ஓம் மூவாச் சாவா  முத்தா போற்றி
    ஓம்  ஆவா  எங்களுக்கு  அருள்வாய்  போற்றி
            ஓம் தமிழ்ச்சுவை  சார்திருச் செவியோய்  போற்றி
    ஓம் அமிழ்தாய்  எம்மகத்து  ஆனாய்  போற்றி
           ஓம்  மழவிளங்களிரே  மணியே  போற்றி
    ஓம்   குழவியாய்  சிவன்மடி  குலவுவோய்   போற்றி                    60

           ஓம் பெருச்சாளியூரும்  பிரானே போற்றி
    ஓம்  நரிச் செயலார்பால்  நண்ணாய்  போற்றி
           ஓம்  செந்தாமரைத்  தாள்  தேவா  போற்றி
    ஓம் நந்தா மணியே நாயக  போற்றி
            ஓம் இருள்சேர்  இருவினை  எறிவாய் போற்றி
    ஓம்  கரிமுகத்து  எந்தாய் காப்போய்  போற்றி                                 66

           ஓம்  ஆங்காரம்முளை  அறுப்பாய்  போற்றி
   ஓம்  பாங்கார்  இன்பப்  பராபர  போற்றி
           ஒம் கற்றவர் விழுங்கும்  கனியே  போற்றி
    ஓம்   மற்றவர் காணா  மலையே  போற்றி
           ஓம்  சொல்லொடு  பொருளின்  தொடர்பே  போற்றி
    ஓம்  கல்லும்  கரைக்க  வல்லோய்  போற்றி                                  72

           ஓம் தொந்தி வயிற்றுத் தந்தி போற்றி
   ஒம் முந்திய பொருட்கும்  முந்தியோய்  போற்றி
          ஓம் ஐந்து கை உடைய  ஐய  போற்றி
  ஓம்  ஐந்தொழில்  ஆற்றும்  அமர  போற்றி
          ஓம் அருளாய்  அருள்வாய்  ஆண்டவ  போற்றி
  ஓம்  தருவாய்  மணமலர்த் தாராய்  போற்றி                                 78

         ஓம்  கயமுக அசுரனைக் காய்ந்தாய்  போற்றி
 ஓம்  மயலரும்  இன்ப  வாழ்வே  போற்றி
         ஓம்  ஆனையாய்  புழுவாய்  ஆனாய்  போற்றி
 ஒம் பானை  வயிறறுப் பரமே  போற்றி
         ஓம்  கடம்பொழி  யானைக் கன்றே  போற்றி
 ஓம்  மடம்ஒழி  அறிவின் வளனே போற்றி                                      84

         ஓம் பாலொடு  தேனும்  பருகுவோய் போற்றி
 ஓம்  மேலோட கீழாய்  மிளிர்வோய்  போற்றி
         ஓம்  எய்ப்பில் வைப்பாய்  இருந்தோய்  போற்றி
 ஓம் மெய்ப்பொருள் வேழ  முகத்தான்  போற்றி
         ஓம்  நல்லார்க்கு  எட்டும்  நாதா  போற்றி
  ஓம்  பொல்லா  மணியே  புராதன  போற்றி                                     90

         ஓம்  அறிவின்  வரம்பில்  அகன்றாய்  போற்றி
  ஓம் குறிகுணம்  கடந்த குன்றே  போற்றி
          ஓம்  எட்டு வான்குணத்து எந்தாய் போற்றி
  ஓம்  கட்டறு  களிற்று  முகத்தோய்  போற்றி
          ஓம்  மலரில்  மணமாய்  வளர்ந்தாய்  போற்றி
  ஓம்  அலர் கதிர் ஒளியில்  அமர்வோய்  போற்றி                           96

           ஓம் ஓங்காரம்  முகத்து  ஒருத்தல்  போற்றி
  ஓம்  ஏங்காது  உயிர்க்கு  அருள் இயற்கை போற்றி
          ஓம் எண்ணும் எழுத்துமாய்  இசைந்தாய்  போற்றி
  ஓம்  பண்ணும்  பயனுமாய்  பரந்தாய்  போற்றி
         ஓம் அருவே  உருவே  அருஉரு  போற்றி
  ஓம்  பொருளே  பொருளின்  புணர்ப்பே  போற்றி                             102

          ஓம் புகர்முகக்  களிற்றுப்  புண்ணிய  போற்றி
 ஓம்  அகலிடம்  நிறைய  அமர்ந்தோய்  போற்றி
          ஓம்  செல்வம் அருள்க  தேவா போற்றி 
 ஓம்  நல்லன  எமக்கருள்  நாயக  போற்றி
         ஓம் ஆக்கமும்  ஊக்கமும்  அருள்வாய்  போற்றி
 ஓம்  காக்க எங்களை  உன்  கழலினைப்   போற்றியே  ....               108

             ..... திருசசிற்றம்பலம் ...........

1 comment: