Thursday, October 28, 2010

கர்ம வினைகள் தீர தானங்களும் .... பலன்களும்...





தானங்களும்  பலன்களும் 





அன்னதானம்    செய்தால்    பூர்வ  ஜென்ம  கர்மவினைகள் 
தீரும் . பித்ருக்களின்  ஆசிர்வாதம்  கிடைக்கும். 

ஆடைதானம்  செய்தால்  தகாத உறவுக்  குற்றங்கள் 
நீங்கும். பெண்களின்  கற்பிற்கு  ரட்சையாக  இருக்கும்.

காலணி   தானம்  செய்தால்  பெரியோர்களை  நிந்தித்த 
பாவம் விலகும்.தீர்த்த யாத்திரை  செய்த பலன் கிடைக்கும்.

 மாங்கல்ய சரடு  தானம்  செய்தால் காமக் குற்றங்கள் 
அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம்  உண்டாகும் .   

குடை தானம்  செய்தால்  தவறான  வழியில் சேர்த்த 
செல்வத்தினால்  ஏற்பட்ட பாவம் விலகும் .
குழந்தைகளுக்கு  சிறப்பான  எதிர்காலம்  உண்டாகும். 

பாய்  தானம் செய்வதால்  பெற்றவர்களை  பெரியவர்களை 
புறக்கணித்ததால்  வந்த சாபங்கள்  தீரும். 
கடும் நோய்களுக்கு  நிவாரணம்  கிட்டும் .
அமைதியான  மரணம்  ஏற்படும் .

பசு  தானம்  செய்தால் இல்லத்தின்  தோஷங்கள்  விலகும்.
பலவித  பூஜைகளின்  பலன்கள்  கிடைக்கும்.

 பழங்கள் தானம்  செய்தால்  பல ஜீவன்களை  வதைத்த 
சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.

 காய்கறிகள்  தானம்  செய்தால்  பித்ரு சாபங்கள் விலகும் .
 குழந்தைகளின்  ஆரோக்யம்  வளரும்.

 அரிசி  தானம் செய்தால்  பிறருக்கு  ஒன்றுமே தராமல்
 தனித்து  வாழ்ந்த  சாபம்  தீரும்.  வறுமை  தீரும்.

எண்ணெய்   தானம் செய்தால்  நாம்  அறிந்தும்  அறியாமலும்
 செய்த கர்ம வினைகள்  அகலும் .கடன்கள் குறையும்.
 
பூ    தானம்  செய்தால்  அந்தஸ்து  காரணமாக 
பிறரை  அவமதித்ததால்  ஏற்படும் தீவினைகள்  நீங்கும்.
 குடும்ப வாழ்க்கை  சுகமாகவும் , சாந்தமாகவும்  அமையும். 

பொன் மாங்கல்யம் தானம்  செய்தால்  மாங்கல்ய
தோஷங்கள்  நீங்கும். திருமண  தடங்கல்கள்  நீங்கும் .

நம்மால்  முடிந்த  தானங்கள்  செய்தால்  நமக்கு  வளமான 
வாழ்வு  அமைவதோடு  , நம்  சந்ததிக்கும்   நல்ல  வளமான 
வாழ்வு   அமையும். 


Wednesday, October 13, 2010

ஸ்ரீமஹா சரஸ்வதி 108 போற்றி .....


                       சரஸ்வதி  நமஸ்துப்யம்  வரதே  காம ரூபிணி
                       வித்யாரம்பம்  கரிஷ்யாமி  ஸித்திர் பவது மே ஸதா...

ஆய கலைகள்  அறுபத்து நான்கினையும்
ஏய  உணர்விக்கும்  என்  அம்மை -தூய
உருப்பளிங்கு போல்வாள்  என் உள்ளத்தினுள்ளே 
இருப்பளிங்கு  வாராது இடர் .

ஓம்   கலைவாணியே  போற்றி
ஓம்   கல்வியறிவு   தருபவளே  போற்றி
ஓம்   நான்முகனின்  நாயகியே  போற்றி
ஓம்   நான்முகனின்  நாநுனியில்  வசிப்பவளே  போற்றி

ஓம்   சகல கலா வல்லித்தாயே   போற்றி
ஓம்   ஏகவல்லி  நாயகியே  போற்றி
ஓம்   பிரம்மதேவரின்  பத்தினியே  போற்றி
ஓம்   பரசுராமரைப்  பெற்றவளே   போற்றி                                             8

ஓம்  கல்வியறிவிற்கு   அதிபதியே  போற்றி
ஓம்  மஹா மாயா  சக்தியும்  நீயே   போற்றி
ஓம்   தாமரை  மலரில்  வாசம்  செய்பவளே  போற்றி
ஓம்   கேட்கும்  வரமனைத்தும்  தருபவளே  போற்றி

ஓம்   ஞானமுத்திரை  தருபவளே  போற்றி
ஓம்   புத்தகம்   கரத்தில்  கொண்டவளே  போற்றி
ஓம்  மஹா  வித்தை  நீயே  தாயே  போற்றி 
ஓம்  மஹா பாதகங்களை  துவம்சம்  செய்பவளே  போற்றி         16

ஓம் அனைத்து  யோகங்களையும்  தருபவளே  போற்றி
ஓம்  மஹாகாளி  மஹாதுர்கா  மஹாலஷ்மி  நீயே  போற்றி
ஓம்  உயரிய  கல்வியை  கேட்டபடி  தருபவளே  போற்றி
ஓம்  கற்றதற்கு  ஏற்ற  உயர்வாழ்வை  வரமாய்த்  
தருபவளே  போற்றி

ஓம்  சர்வ மந்த்ரங்களின்  மூலாதாரப்  பொருள் நீயே போற்றி
ஓம்   சர்வ  மங்கள மந்திரங்கள்  சித்தி யளிப்பவளே   போற்றி
ஓம்   சர்வ மங்கள மாங்கல்ய   பலம்  தருபவளே  போற்றி
ஓம்   சர்வ சாஸ்த்திரங்களின்  உற்பத்தி  ஸ்தலம்  நீயே  போற்றி  24

ஓம்  கற்றோரை  சென்ற  இடமெல்லாம்   சிறப்பிக்கும்  
தாயே போற்றி
 ஓம்  நல்லவர்  நாவில்   இருந்து  நல்வாக்கு  
சொல்பவளே  போற்றி
 ஓம்  அற்புத மந்திரம்  எழுதும்   வாணியே  போற்றி
 ஓம்   அழகுவீணை   இசைப்பவளே  போற்றி

 ஓம்  கலைகள்  மூன்றிற்கும்  மூலாதாரச்  சுடரே  போற்றி
 ஓம்  கல்வியை  உனது  ரூபமாகக்  கொண்டவளே  போற்றி
 ஓம்  யந்திர  தந்திர  மந்த்ரம்   கற்றுத்  தருபவளே   போற்றி
 ஓம்  தொழிற்  கல்வி  அனைத்தும்   தருபவளே  போற்றி                 32

ஓம்   அனைத்து  வாகனங்களின்  சூட்சுமம்  நீயே  போற்றி 
ஓம்   கணிதம்  தந்த  கலைவாணித்  தாயே   போற்றி
ஓம்   கணிப்பொறி யியலின்   காரணி  போற்றி
ஓம்    காலம்   நேரம்   வகுத்தவளே   போற்றி

ஓம்  விஞ்ஞானத்தின்  மூலாதாரமே  போற்றி
ஓம்   அண்ட சராசரங்களின்  இருப்பிடம்  கணித்த  தாயே  போற்றி
ஓம்   வான  சாஸ்திர  அறிவின்   பிறப்பிடம்  நீயே  போற்றி
ஓம்   வறுமையை  போக்கும்  கல்வித்  தாயே  போற்றி                     40

ஓம்  இயல்  இசை  நாடகம்  போதித்த   கலைமகளே  போற்றி
ஓம்   வீணை யொலியில்  மந்த்ரம்  மீட்டும்  தாயே  போற்றி
ஓம்  மூவுலகும்  மயங்கும்  வீணை  மீட்டும்  
வீணா கான வாணி  போற்றி
ஓம்  முத்தமிழும்   தழைக்கச்  செய்த   அன்னையே   போற்றி

ஓம்   வாக்கிற்கு  அதிதேவதை  நீயே  தாயே போற்றி
ஓம்  சௌபாக்ய  செல்வம்  தரும்  மந்த்ரம்  நீயே போற்றி
ஓம்   வாழ்வைப்    புனிதமாக்கும்   மந்திரமே   போற்றி
ஓம்   கலைவாணித் தாயே  சரஸ்வதியே   போற்றி                             48

ஓம்  ரக்தபீஜ  சம்ஹார மந்த்ரம்  தந்த  வாணீ  போற்றி
ஓம்  அம்பிகை  சாமுண்டி  வராஹி  யாவரும்  நீயே  போற்றி
ஓம்  முக்காலங்களிலும்  முகிழ்ந்து  உறைந்தவளே  போற்றி
ஓம் சுபாஷிணி  சுபத்ரை  விஷாலாட்சி  மூவரும்  நீயே  போற்றி

ஓம்  பிரஹ்மி  வைஷ்ணவி  சண்டி  சாமுண்டி  நீயே  போற்றி
ஓம்  பாரதி  கோமதி  நாயகி  நாண்முகி தாயே  போற்றி
ஓம்  மகாலஷ்மி  மஹாசரஸ்வதி  மகாதுர்கா  நீயே  போற்றி 
ஓம் விமலா மாகாளி  மாலினி  யாவரும்  நீயே போற்றி               56 

ஓம்  விந்திய  விலாசினி  வித்யா  ரூபினி   போற்றி 
ஓம்  மஹா  சக்தியினுள்ளே உறைபவள்   போற்றி 
ஓம்  சர்வ தேவியருள்ளும்  உறைபவள்  நீயே  போற்றி 
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும்  கல்வியினால் 
அருள்பவளே  போற்றி 

ஓம் திருமால் உந்தியில் உதித்தவனின்  துணைவி  போற்றி 
ஓம் உலகின்  எல்லா எழுத்திற்கும்  மூலமே போற்றி 
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மந்திர எழுத்துகளின்  ரூபமே போற்றி 
ஓம் மந்திர ராஜ்யத்தின் தேவி பீஜாட்ஸரி போற்றி                           64

ஓம் சர்வாம்பிகையே சத்தியவாசினி புத்தகவாசினியே  போற்றி
ஓம்  சர்வ  அபாயங்களையும்  துவம்சிப்பவளே  போற்றி 
ஓம்  சாற்றுக் கவி  நாநுனி யுரையும் அன்னையே போற்றி 
ஓம் காற்றில் கலந்த  மந்திர  ஒலியே  போற்றி

ஓம் வித்யா திருஷ்டா யுத்மா போற்றி 
ஓம் வாக்கின்  தலைவியான  வாக்தேவி  போற்றி 
ஓம் விஞ்சு பகவதி  உயர்புகழ்  பிராம்ஹி  போற்றி 
ஓம்  சொல்லும் சொல்லின்  மெய்ஞானப் பொருளே போற்றி  72

ஓம்  நீதித்துறை  நடுநின்ற  நாயகி போற்றி 
ஓம்  பண் பரதம் கல்வி  தருபவளே போற்றி 
ஓம் கற்றவர் நாவில் உறைபவளே  போற்றி 
ஓம் யந்திர வாகன  ஆயுதங்களின்  அதிதேவதையே போற்றி 

ஓம் தேகத்தின்  புத்திப் பகுதியில்  உறைபவளே  போற்றி 
ஓம்  வேத தர்ம நீதி  சாஸ்திரங்கள்  வகுத்தவளே  போற்றி 
ஓம்  பூஜிப்போர் மனம்  மகிழ்விப்பவளே  போற்றி 
ஓம்  அனைத்து  புண்ய தீர்த்தங்களின்  ரூபத்தவளே  போற்றி     80

ஓம்  யமுனை நதி தீரத்தின்  மையங் கொண்டவளே  போற்றி 
ஓம் சர்வ ஜீவ காருண்ய மனம் கொண்ட  மாதரசி போற்றி 
ஓம்  பிரம்மா லோகத்தை  மையம்  கொண்ட பிரம்ம 
நாயகி போற்றி 
ஓம் உச்ச நிலை வறுமையையும்  கற்ற வித்தை கொண்டு 
அழிப்பவளே  போற்றி 

ஓம் சரணடைந்தவர்க்கு  சாஸ்வத மானவளே போற்றி 
ஓம் வேதாந்த ஞானிகளின்  ரூபத்தவளே போற்றி 
ஓம் எழு தாமரை யுறை புகழ் முன்றக் கரவுருள்  போற்றி 
ஓம் பின்னமேதுமில்லாமல்  தேவையானதை 
தருபவளே  போற்றி                                                                               88 

ஓம்  இடது ஒரு கையில் சுவடி கொண்டவளே  போற்றி 
ஓம் இடது  மறு கையில்  ஞானாமிர்த கலசம்  
கொண்டவளே  போற்றி 
ஓம் வலது ஒரு கையில் சின் முத்ரா  கொண்டவளே  போற்றி 
ஓம் வலது  மறு கையில் சிருஷ்டியின் அட்சரமாலை 
கொண்டவளே போற்றி 

ஓம் பத்மாசனம் உறைபவளே  போற்றி 
ஓம்  புத்திப் பிரகாசம்  தருபவளே  போற்றி 
ஓம்  வாக்கு வன்மை  தருபவளே  போற்றி 
ஓம் மனதில்  தூய்மை சாந்தி  அமைதி  தருபவளே  போற்றி       96

ஓம் தத்துவ எழுத்து ரூபம் தாங்கிய  தேவி போற்றி 
ஓம்  மஹா நைவேத்யம்  உவந்தவள்  போற்றி 
ஓம்  கற்பூர  நீராஜனம் உவந்தவள்  போற்றி 
ஓம் ஸ்வர்ண புஷ்பம்  உவந்தவளே  போற்றி                                     100
ஓம்  யுக தர்மம்  கணித்தவளே  சகலகலாவல்லியே  போற்றி 
ஓம்  ஸ்ரீசக்கர பூஜையின் மந்திர ரூபிணியே  போற்றி 
ஓம் பதாம் புயத்தவளே  சகலகலாவல்லியே  போற்றி 
ஓம்  கற்றறிஞர்  கவிமழை  தரும் கலாப மயிலே  போற்றி 
  
ஓம்  கண்ணும் கருத்தும்  நிறை  சகலாகலாவல்லியே  போற்றி 
ஓம்  வெள்ளோதிமைப் பேடே  சகலகலாவல்லியே போற்றி 
ஓம்  கண்கண்ட  தெய்வமே  சகலகாவல்லியே போற்றி 
ஓம் கல்விச் செல்வம்  தந்தருள்வாய்  கலைவாணியே  
போற்றி ... போற்றி ... போற்றி ... போற்றியே ....                                 108 


வாணி  சரஸ்வதி  என் வாக்கில்  நீ குடியிருந்து 
தாயே  சரஸ்வதியே  சங்கரி நீ என் முன் நடந்து 
என் நாவில் குடியிருந்து  நல்லோசை  தந்துவிட்டு 
கமலாசனத்தாலே  எமைக் காத்து 
என் குரலில்  நீயிருந்து  கொஞ்சிடனும்  பெற்றவளே ...
என்  நாவில் நீ தங்கி  குடியிருந்து 
சொற்பிழை  பொருட்பிழை  நீக்கி 
நல்லறிவும்  நல்வாழ்வும்  நீ தந்து 
மங்கல வாழ்விற்கு  வழி வகுத்து 
தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு 
சாஸ்வதமான  சரஸ்வதி  தாயே 
உன்  திருவடி  சரணம்  போற்றி... 
உன்  மலரடி  சரணம்  போற்றி ...போற்றியே .....