ஓம் அரசனே போற்றி
ஓம் அரசே போற்றி
ஓம் அமுதே போற்றி
ஓம் அழகே போற்றி
ஓம் அத்தா போற்றி ஓம் அற்புதா போற்றி
ஓம் அறிவா போற்றி 8
ஓம் அம்பலவா போற்றி
ஓம் அரியோய் போற்றி
ஓம் அருந்தவா போற்றி
ஓம் அணியே போற்றி
ஓம் அண்டா போற்றி
ஓம் ஆதியே போற்றி
ஓம் ஆறங்கா போற்றி
ஓம் ஆரமுதே போற்றி 16
ஓம் ஆறணு போற்றி
ஓம் ஆண்டவா போற்றி
ஓம் ஆலவாயா போற்றி
ஓம் ஆருரா போற்றி
ஓம் இறைவா போற்றி
ஓம் இடபா போற்றி
ஓம் இன்பா போற்றி
ஓம் ஈசா போற்றி 24
ஓம் உடையாய் போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் உயிரே போற்றி
ஓம் ஊழியே போற்றி
ஓம் எண்ணே போற்றி
ஓம் எழுத்தே போற்றி
ஓம் எண்குணா போற்றி
ஓம் எழிலா போற்றி 32
ஓம் எளியா போற்றி
ஓம் ஏகா போற்றி
ஓம் ஏழிசையே போற்றி
ஓம் ஏறுர்ந்தா போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் ஒருவா போற்றி
ஓம் ஒப்பிலா போற்றி
ஓம் ஒளியா போற்றி 40
ஓம் ஒலியா போற்றி
ஓம் ஓங்காரா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் கதிரே போற்றி
ஓம் கதியே போற்றி
ஓம் கனியே போற்றி
ஓம் கலையா போற்றி
ஓம் காருண்யா போற்றி 48
ஓம் குறியே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் குணமே போற்றி
ஓம் கூத்தா போற்றி
ஓம் சடையா போற்றி
ஓம் சங்கரா போற்றி
ஓம் சதுரா போற்றி
ஓம் சதாசிவா போற்றி 56
ஓம் சிவமே போற்றி
ஓம் சிறமே போற்றி
ஓம் சித்தா போற்றி
ஓம் சீரா போற்றி
ஓம் சுடரே போற்றி
ஓம் சுந்தரா போற்றி
ஓம் செல்வா போற்றி
ஓம் செங்கணா போற்றி 64
ஓம் செம்பொனா போற்றி
ஓம் சொல்லே போற்றி
ஓம் ஞாயிரே போற்றி
ஓம் ஞானமே போற்றி
ஓம் தமிழே போற்றி
ஓம் தத்துவா போற்றி
ஓம் தலைவா போற்றி
ஓம் தந்தையே போற்றி 72
ஓம் தாயே போற்றி
ஓம் தாண்டவா போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திசையே போற்றி
ஓம் திரிசூலா போற்றி
ஓம் துணையே போற்றி
ஓம் தெளிவே போற்றி
ஓம் தேவதேவா போற்றி 80
ஓம் தேழா போற்றி
ஓம் நமசிவாயா போற்றி
ஓம் நண்பா போற்றி
ஓம் நஞ்சுண்டா போற்றி
ஓம் நான்மறையா போற்றி
ஓம் நிறைவே போற்றி
ஓம் நினைவே போற்றி
ஓம் நீலகண்டா போற்றி 88
ஓம் நெறியே போற்றி
ஓம் பண்ணே போற்றி
ஓம் பித்தா போற்றி
ஓம் புனிதா போற்றி
ஓம் புராணா போற்றி
ஓம் பெரியோய் போற்றி
ஓம் பொருளே போற்றி
ஓம் பொங்கரவா போற்றி 96
ஓம் மணியே போற்றி
ஓம் மதிசூடியே போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் மலையே போற்றி
ஓம் மஞ்சா போற்றி
ஓம் மணாளா போற்றி 102
ஓம் மெய்யே போற்றி
ஓம் முகிலே போற்றி
ஓம் முத்தா போற்றி
ஓம் முதல்வா போற்றி
ஓம் வாழ்வே போற்றி
ஓம் வைப்பே போற்றி 108
தென்னாடுடைய சிவனே போற்றி ...
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ...
வேதிய வேதா கிதா, விண்ணவர் அண்ணா
என்றென்று ஓதியே மலர்கள் தூவி
ஒருங்கி நின் கழல்கள் காணப் பாதியோர்
பெண்ணை வைத்தாய் , படர்சடை மதியம்
சூடும் ஆதியே, ஆலவாயில் அப்பனே
நீவிர் எம் அன்னையரோடு அருள் செய
வரும்போதே, ஞாயிறு திங்கள் செவ்வாய்
புதன் குரு வெள்ளி சனி பாம்பிரண்டு ,
அனைத்து நவக் கிரகங்களும் எமக்கு நல்லன
செய்யும் வண்ணம் நிலை நிறுத்தி - எம்
அன்னையரோடு நின்று அருள் செய்ய வருகவே ... !!!
No comments:
Post a Comment