Friday, September 17, 2010

ஓம் அகத்தியர் திருவடிகள் 108 போற்றி .....

ஓம்  அகத்தீசாய நம:

அகர  முதல எழுத்தெல்லாம்  ஆதி 
அகத்தியம்  முதற்றே  உலகு










ஓம்  அகத்தீசப்  பெருமானே  போற்றி 
ஓம்  அகிலம் போற்றும்  அறிவுக்கடலே போற்றி
ஓம்  அட்டமா  சித்துகள்  பெற்றவரே  போற்றி 
ஓம்  அகத்தியர்  மலை மீது  அமர்ந்தவரே  போற்றி                    

ஓம்  தமிழ்  முனியே  போற்றி 
ஓம்  இறைவனிடம்  தமிழ்  கற்றவரே  போற்றி 
ஓம்  தமிழின்  முதல் தொண்டரே  போற்றி 
ஓம்  தமிழின் முதல்  முனைவரே  போற்றி                                        8

ஓம்  பொதிகைமலை  மாமுனியே  போற்றி 
ஓம்  தவ சீலரே  போற்றி 
ஓம்  சிவ சீடரே  போற்றி 
ஓம்  கும்ப சம்பவரே  போற்றி 

ஓம்  நந்தீஸ்வரரின் சீடரே போற்றி 
ஓம்  தன்வந்திரியிடம்  மருத்துவம்  பயின்றவரே  போற்றி 
ஓம்  தேரையருக்கு  மருத்துவம்  பயிற்றுவித்தவரே  போற்றி
ஓம் காமேஸ்வரி  மந்திர  உபதேசம்  பெற்றவரே  போற்றி      16

ஓம்  வயதில் எல்லையில்லா  சித்தரே போற்றி 
ஓம் குருவுக்கெல்லாம்  மகா குருவே  போற்றி 
ஓம் சித்தருக்கெல்லாம் மகா சித்தரே  போற்றி 
ஓம் பஞ்சேஷ்டி தலம் உறைபவரே போற்றி 

ஓம்  நவராத்திரி பூஜை கல்பம்  இயற்றியவரே  போற்றி 
ஓம்  நயனவிதி என்ற கண் மருத்துவ நூல் எழுதியவரே போற்றி
ஓம்  விட ஆருட நூல்  தந்தவரே  போற்றி 
ஓம்  மூலிகை அகராதி  அருளியவரே  போற்றி                         24

ஓம் அகத்தியம்  தந்த  அருளாளரே  போற்றி 
ஓம் அகத்தியர்  காவியம்  தந்தவரே  போற்றி
ஓம்  அகத்தியர்  வெண்பா அருளியவரே  போற்றி 
ஓம் அகத்திய  நாடி அருளியவரே  போற்றி                                      

ஓம் வைத்திய சிந்தாமணி  தந்தவரே  போற்றி 
ஓம் அகத்தியர் பஷிணி  அருளாளரே  போற்றி 
ஓம் அகத்திய  சூத்திரம்  படைத்தவரே போற்றி 
ஓம்  அகத்திய ஞானம்  தந்தவரே  போற்றி                                   32

ஓம் அகத்திய சம்ஹிதை  அருளியவரே  போற்றி 
ஓம் ஐந்து சாஸ்திரம்  தந்தவரே  போற்றி 
ஓம் கிரியை யோகம்  படைத்தவரே போற்றி 
ஓம்  ஆறெழுத்து  அந்தாதி  அருளியவரே  போற்றி                       

ஓம்  வைத்திய கௌமி எழுதியவரே  போற்றி 
ஓம் வைத்திய ரத்னாகரம்  எழுதியவரே போற்றி 
ஓம் வைத்திய கண்ணாடி  தந்தவரே  போற்றி 
ஓம் வைத்திய ரத்ன சுருக்கம்  அளித்தவரே  போற்றி             40

ஓம்  வாகட  வெண்பா  அருளியவரே  போற்றி 
ஓம்  சிவா சாலம்  தந்தவரே போற்றி 
ஓம்  சக்தி  சாலம்  தந்தவரே  போற்றி 
ஓம்  சண்முக சாலம்  தந்தவரே  போற்றி                                          

ஓம் சமரசநிலை  ஞானம்  போதிதவரே  போற்றி 
ஓம்  சக்தி  சூத்திரம்  சமைத்தவரே  போற்றி 
ஓம்  இராமனுக்கு சிவகீதை  அருளியவரே  போற்றி 
ஓம்  ஆதித்ய ஹிருதயம் அருளியவரே  போற்றி                    48

ஓம்  வாதாபியை  வதம்  செய்தவரே  போற்றி
ஓம்   சுவேதனின்   சாபம்  தீர்த்தவரே  போற்றி 
ஓம்  இடும்பனை  காவடி  எடுக்க  வைத்தவரே  போற்றி 
ஓம்  தொல் காப்பியரின்  குருவே  போற்றி

ஓம் கடல் நீரைக் குடித்து  வற்றச் செய்தவரே போற்றி 
ஓம் நீரின் மேலே  தவமிருந்தவரே  போற்றி 
ஓம் விந்திய மலையின்  அகந்தையடக்கியவரே போற்றி 
ஓம்  அசுராசுரர்களை  அழித்தவரே போற்றி                           56                   

ஓம்  காவிரியைப்  பெருக்கியவரே  போற்றி 
ஓம்  தாமிரபரணியை  உருவாக்கியவரே  போற்றி 
ஓம்  ராவணனை  இசையால்  வென்றவரே  போற்றி 
ஓம் அகஸ்தீஸ்வரம்  அமைத்தவரே  போற்றி 

ஓம்  தேவாதி தேவர்களை  காத்தவரே  போற்றி 
ஓம்  சிவசக்தி  திருமண  தரிசனம்  கண்டவரே போற்றி 
ஓம்  சித்த வைத்திய  சிகரமே  போற்றி 
ஓம் அகத்திய  பூஜாவிதி  தொகுத்தவரே போற்றி                     64


ஓம்  நான்கு யுகங்களையும்  கடந்தவரே  போற்றி 
ஓம்  முத்தமிழால்  உலகை  ஆண்டவரே  போற்றி 
ஓம்  தமிழ்ச்  சங்கங்களின்   தலைவனே  போற்றி 
ஓம்  சிவசூரிய  வழிபாட்டைத்  துவக்கியவரே  போற்றி
                    

ஓம்  கும்பத்தி லுதித்த  குறுமுனியே  போற்றி 
ஓம்  வடதென் திசையை  சமப்படுத்தியவரே  போற்றி 
ஓம்  உலோபமுத்திரையின்  மணாளா  போற்றி 
ஓம்  அம்பையில்  கோயில்  கொண்டவரே  போற்றி               72

ஓம்  அரும் மருந்துகள்  அறிந்தவரே  போற்றி 
ஓம் அனைத்தும் கற்றுத்  தெளிந்தவரே  போற்றி 
ஓம்  முக்காலமும்  உணர்ந்தவரே  போற்றி 
ஓம்  முத்தமிழும்  வளர்த்தவரே  போற்றி                                         

ஓம்  ஆஷா சுவாஸினி மைந்தரே  போற்றி 
ஓம்  நெல்மணிகளின்  தலைவனே  போற்றி 
ஓம்  சிவன்  அம்சமே  போற்றி 
ஓம் திருமால் விசுவரூப தரிசனம் கண்டவரே போற்றி       80

ஓம்  சர்வ  சக்திகளும்  தருபவரே  போற்றி 
 ஓம் சகல கலைகளும்  சித்தியாக  அருள்பவரே போற்றி 
ஓம்  பிறவா வரம்  தரும்   பெருமானே  போற்றி 
ஓம்  தேவி  உபாசகரே  போற்றி                                                              

ஓம்  இசையிலும்  கவிதையிலும் மேன்மை தருபவரே  போற்றி 
ஓம்  கல்வித் தடை  நீக்குபவரே  போற்றி 
ஓம்  புத பகவானின்  தோஷம்  நீக்குபவரே  போற்றி 
ஓம்  முன் தீவினைப்  பாவங்கள்  தீர்ப்பவரே  போற்றி           88

ஓம்  பேரும் புகழும் மதிப்பும் உண்டாக  அருள்பவரே போற்றி 
ஓம்  பூர்விக சொத்துக்கள் கிடைக்க  அருள்பவரே  போற்றி 
ஓம்  சகலவித  நோய்களையும்   தீர்ப்பவரே  போற்றி 
ஓம்  குடும்பத்தில்  ஒற்றுமை  நிலவச்  செய்பவரே  போற்றி 

ஓம்  பித்ரு சாபம்  நீக்கி    ஆசி பெற  அருள்பவரே  போற்றி 

ஓம்  சத்ருக்களின்  மனம்  மாற்றி  அன்புரச் செய்பவரே  போற்றி 
ஓம்  சித்திகள்  பெற்று  உயரச்  செய்பவரே  போற்றி 
ஓம்  நல் குருவாகி  மனதார  வாழ்த்து பவரே   போற்றி          96

ஓம்  அண்டம் பிண்டம் நிறைந்த அயன்மால்  போற்றி 
ஓம்  அகண்டம் பரி பூரணத்தின் அருளே   போற்றி 
ஓம்  மண்டலஞ் சூழ்  இரவிமதி  சுடரே  போற்றி 
ஓம்  மதுரத்   தமிழோதும்   அகத்தீசரே  போற்றி                        100

 ஓம்  எண்திசையும்  புகழும்  என் குருவே  போற்றி
 ஓம் இடைகலையின்  சுழுமுனையின்  கமலம்  போற்றி 
ஓம்  குண்டலியில்  அமர்ந்தருளும்  குகனே  போற்றி 
ஓம்  மேன்மை கொள் சைவநீதி  விளங்க  செய்பவரே  போற்றி

ஓம்  கும்பேஸ்வரன் கோயில் முக்தி  அடைந்தவரே  போற்றி 
ஓம்  குருவாய்  நின்று  இன்றும்  ஆசிகள்  அளிப்பவரே  போற்றி 
ஓம்  குருமுனியின்  திருவடிகள்  எப்போதும்  போற்றி 
ஓம் இன்னல்கள்  நீக்கி இன்பம்  தரும்  அகத்தீசப்  பெருமானே 
உமது  திருவடிகள்  சரணம்  போற்றி.... போற்றியே .....            108   




 தவறிருப்பின்  சிறியேனை  மன்னிக்கவும் , தயவு செய்து  
சுட்டிக் காட்டவும்.  திருத்திக்  கொள்வேன்.








Wednesday, September 8, 2010

ஸ்ரீ பத்ரகாளியம்மன் 108 போற்றி ....

காளி  காயத்ரி

ஓம்  காளிகாயை ச  வித்மஹி        சிம்ம வாஹின்யை ச  தீமஹி
தன்னோ  அகோர  ப்ரசோதயாத் .    

ஸ்ரீ  பத்ரகாளியம்மன்  108 போற்றி .....
ஓம்  அன்னையே  போற்றி
ஓம்   அழகே      போற்றி
ஓம்   ஆத்தா      போற்றி
ஓம்   ஆரணி      போற்றி
ஓம்   இளகியோய்   போற்றி
ஓம்    இமயோய்    போற்றி                             6

ஓம்   ஈஸ்வரி   போற்றி
ஓம்   ஈவோய்    போற்றி
ஓம்   உமையே    போற்றி
ஓம்   உத்தியே    போற்றி
ஓம்   எழிலே    போற்றி
ஓம்   ஏதிலாய்   போற்றி                                   12

ஓம்  ஐங்குனி   போற்றி
ஓம்   ஐஸ்வரி   போற்றி
ஓம்   அங்கயல்   போற்றி
ஓம்   அருமையே   போற்றி
ஓம்   உருமையே   போற்றி
ஓம்   ஒளியின் ஒளியே  போற்றி                 18

ஓம்   கனல் விழியே   போற்றி
ஓம்   கமலினியே    போற்றி
ஓம்   கங்கனியே     போற்றி
ஓம்   கிளி மொழியே   போற்றி
ஓம்   குயில்  மொழியே  போற்றி
ஓம்   குண சீலியே   போற்றி                           24

ஓம்  குணவதியே   போற்றி
ஓம்   குடும்பினியே   போற்றி
ஓம்   கொற்றவையே   போற்றி
ஓம்   கொல்லியே   போற்றி
ஓம்   குவிமுலையே  போற்றி
ஓம்   கோள்களாட்சியே  போற்றி                 30

ஓம்   கெளரியே    போற்றி
ஓம்   கௌமாரியே  போற்றி
ஓம்   கெளசகியே    போற்றி
ஓம்   கமலையே    போற்றி
ஓம்   சண்டி சாமுன்டியே   போற்றி
ஓம்  சூலினியே   போற்றி                                 36

ஓம்  செங்கனியே    போற்றி
ஓம்   செஞ்சடையே  போற்றி
ஓம்   சைகையே    போற்றி
ஓம்   தைலஸ்ரீயே   போற்றி
ஓம்   தர்பரையே    போற்றி
ஓம்   பராபரையே   போற்றி                           42

ஓம்   தாட்சாயணியே   போற்றி
ஓம்   தினகரியே    போற்றி
ஓம்   நடனகாளியே   போற்றி
ஓம்   நல்மையிலே  போற்றி
ஓம்  நற்குயிலே   போற்றி
ஓம்   ஆதியே   போற்றி                                    48

ஓம்  ஓங்காரியே   போற்றி
ஓம்   பைரவியே    போற்றி
ஓம்  கருஉருவே   போற்றி
ஓம்  புனலின்  இதயமே  போற்றி
ஓம்  புரந்தரியே   போற்றி                   
ஓம்   நிரந்தரியே   போற்றி                              54

ஓம்  மகா மாயா  போற்றி
ஓம்   மகமாயி   போற்றி
ஓம்   மாலினியே  போற்றி
ஓம்  குண்டலினியே   போற்றி
ஓம்   பரிபூரணியே   போற்றி
ஓம்   பார்கவியே   போற்றி                             60

ஓம்   உடையவள்  போற்றி
ஓம்   பங்கஜா   போற்றி
ஓம்   சாம்பவியே   போற்றி
ஓம்   மோகனாவே  போற்றி
ஓம்   மனோன்மணியே  போற்றி
ஓம்   தடாதகையே   போற்றி                           66

ஓம்  ஜடாதாரியே    போற்றி 
ஓம்   மணிமகளே    போற்றி
ஓம்   அலர்மகளே   போற்றி
ஓம்   சந்த்ரிகையே   போற்றி
ஓம்   சியாமளா   போற்றி
ஓம்   ஸ்ரீயந்திரம்   போற்றி                               72

ஓம்  பொங்கழல்   போற்றி
ஓம்   இளம் மலரே  போற்றி
ஓம்   மதியொளியே   போற்றி 
ஓம்   ஒளிசிவையே   போற்றி
ஓம்   வான்நிதியே   போற்றி
ஓம்   பசிலோக  பயங்கரியே   போற்றி      78

ஓம்   நிரஞ்சனியே   போற்றி
ஓம்   ஆனந்த நாயகியே  போற்றி
ஓம்   பரோப காரியே   போற்றி
ஓம்    பராசக்தியே  போற்றி
ஓம்   வாராஹியே   போற்றி
ஓம்   ஓம்   வாக்தேவியே  போற்றி              84

ஓம்   வீரகோஷ்டித்  தாயே  போற்றி
ஓம்   நவகாளியே   போற்றி
ஓம்   அஷ்டகாளியே   போற்றி
ஓம்   வீர காளியே   போற்றி
ஓம்   வீர பத்ரகாளியே  போற்றி
ஓம்   வன  பத்ரகாளியே  போற்றி                90

ஓம்   கொல்லிக்காளியே  போற்றி
ஓம்  பச்சைக் காளியே  போற்றி
ஓம்  பவழக் காளியே  போற்றி
ஓம்  வக்ரகாளியே   போற்றி
ஓம்   மதுரகாளியே   போற்றி
ஓம்  கொண்டத்துக் காளியே  போற்றி       96

ஓம்  ஊர்த்துவ  காளியே  போற்றி
ஓம்   வெட்டுடைக் காளியே  போற்றி
ஓம்   அக்கினி  காளியே போற்றி
ஓம்   பாதாள  காளியே  போற்றி
ஓம்   இரண  காளியே  போற்றி
ஓம்   தில்லைக்  காளியே போற்றி             102

 ஓம்   மங்கள  சண்டிகா   போற்றி
 ஓம்   மா காளியே  போற்றி
 ஓம்   கோட்டைக்  காளியே  போற்றி
 ஓம்   உஜ்ஜயினி  மாகாளியே  போற்றி
 ஓம்   பத்ரகாளித்  தாயே  போற்றி
 ஓம்   வடபத்ர  காளித் தாயே  போற்றி ... போற்றி ...   108

ஓம்  சக்தி ...  ஓம்  சக்தி  ... ஓம்  சக்தி  ...ஓம் ...
ஓம்   சக்தி ...  பராசக்தி ...  ஓம்  சக்தி ... ஓம் ...
ஓம்   சக்தி ...   பத்ரகாளி...  ஓம்  சக்தி ... ஓம் .

Sunday, September 5, 2010

மங்களம் பாடல் பூஜை நிறைவுப் பாடல்

சங்கராய  சங்கராய  சங்கராய     மங்களம்
சங்கரி  மனோஹராய  சாஸ்வதாய   மங்களம் 
குருவராய       மங்களம் 
தத்தோத்ராய   மங்களம்
கஜானனாய     மங்களம்
ஷடானனாய   மங்களம் 
ரகுவராய         மங்களம்
வேணு  க்ருஷ்ண   மங்களம் 
சீதாராம    மங்களம் 
ராதா க்ருஷ்ண  மங்களம் 

அன்னை  அன்னை  அன்னை  அன்னை 
அன்பினிற்கு    மங்களம் 
ஆதிசக்தி   அம்பிகைக்கு  அனந்தகோடி   மங்களம் 
என்னுள்ளே   விளங்கும்    எங்கள்   ஈஸ்வரிக்கு   மங்களம் 
இச்சையாவும்   முற்றுவிக்கும்  சிற் சிவைக்கு   மங்களம்

தாழ்வில்லாத  தன்மையும்  தளர்ச்சியற்ற  வன்மையும் 
வாழ்வினால்   பயன்களும்  என்  வாக்கிலே   வரங்களும் 
பக்தியிலே   கசிந் தலைந்து   பாடுகின்ற   பாண்மையும்
பாடுவோருக்கு   ஞான போக  பாக்கியங்கள்   மேன்மையும்

என்றும்  ஓங்க  என் கரத்து  இயற்கையான  சக்தியை
தந்து   ஞான மூர்த்தியாய்  தனித்து வைத்த  சக்தியாம் 
நாம  கீர்த்தனம்  பரந்து  நாடெல்லாம்  செழிக்கவும் 
வேறிடாத  இன்பம்  பொங்கி  வீடெல்லாம்  விளங்கவும் 

ஞான தீபமேற்றி  என்றும்  நாம  கீதம்   பாடுவோம் 
தர்ம சக்தி  வாழ்கவென்று  சந்தகம்  கொண்டாடுவோம் 

        கண்களை  மூடி  இருதய கமலத்தில்  அம்பிகை   வீற்றிருப்பதை 
கண்டு  மனதார  வணங்கி  பிரார்த்தனை   செய்யவும் .
      எல்லோரும்   சுகமாக  வாழ்க ...
      எல்லோரும்   நோயின்றி   வாழ்க ...
     எல்லோருக்கும்    மங்களம்   உண்டாகுக ...

என  வணங்கி  இரண்டு  நிமிடம்  தியானம்  செய்யவும் .
  
"ஹரி  ஓம்  தத்  சத் "   எனக்  கூறி  தியானத்தை   நிறைவு   செய்யவும் .

ஓம்  சக்தி .... ஓம்  சக்தி .... ஓம்  ....


Tigers love to tug on purple ducks