Sunday, September 5, 2010

மங்களம் பாடல் பூஜை நிறைவுப் பாடல்

சங்கராய  சங்கராய  சங்கராய     மங்களம்
சங்கரி  மனோஹராய  சாஸ்வதாய   மங்களம் 
குருவராய       மங்களம் 
தத்தோத்ராய   மங்களம்
கஜானனாய     மங்களம்
ஷடானனாய   மங்களம் 
ரகுவராய         மங்களம்
வேணு  க்ருஷ்ண   மங்களம் 
சீதாராம    மங்களம் 
ராதா க்ருஷ்ண  மங்களம் 

அன்னை  அன்னை  அன்னை  அன்னை 
அன்பினிற்கு    மங்களம் 
ஆதிசக்தி   அம்பிகைக்கு  அனந்தகோடி   மங்களம் 
என்னுள்ளே   விளங்கும்    எங்கள்   ஈஸ்வரிக்கு   மங்களம் 
இச்சையாவும்   முற்றுவிக்கும்  சிற் சிவைக்கு   மங்களம்

தாழ்வில்லாத  தன்மையும்  தளர்ச்சியற்ற  வன்மையும் 
வாழ்வினால்   பயன்களும்  என்  வாக்கிலே   வரங்களும் 
பக்தியிலே   கசிந் தலைந்து   பாடுகின்ற   பாண்மையும்
பாடுவோருக்கு   ஞான போக  பாக்கியங்கள்   மேன்மையும்

என்றும்  ஓங்க  என் கரத்து  இயற்கையான  சக்தியை
தந்து   ஞான மூர்த்தியாய்  தனித்து வைத்த  சக்தியாம் 
நாம  கீர்த்தனம்  பரந்து  நாடெல்லாம்  செழிக்கவும் 
வேறிடாத  இன்பம்  பொங்கி  வீடெல்லாம்  விளங்கவும் 

ஞான தீபமேற்றி  என்றும்  நாம  கீதம்   பாடுவோம் 
தர்ம சக்தி  வாழ்கவென்று  சந்தகம்  கொண்டாடுவோம் 

        கண்களை  மூடி  இருதய கமலத்தில்  அம்பிகை   வீற்றிருப்பதை 
கண்டு  மனதார  வணங்கி  பிரார்த்தனை   செய்யவும் .
      எல்லோரும்   சுகமாக  வாழ்க ...
      எல்லோரும்   நோயின்றி   வாழ்க ...
     எல்லோருக்கும்    மங்களம்   உண்டாகுக ...

என  வணங்கி  இரண்டு  நிமிடம்  தியானம்  செய்யவும் .
  
"ஹரி  ஓம்  தத்  சத் "   எனக்  கூறி  தியானத்தை   நிறைவு   செய்யவும் .

ஓம்  சக்தி .... ஓம்  சக்தி .... ஓம்  ....


Tigers love to tug on purple ducks




No comments:

Post a Comment